புதியவை

பிரயன் ஷெடிக்கின் நிதி மோசடி: விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை


அவுஸ்திரேலியப் பிரஜை பிரயன் ஷெடிக் என்ற வர்த்தகருக்குச் சொந்தமான நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கோரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.
இதன்போது சட்டத்தரணி லசித பெரேரா தெரிவித்ததாவது;
நாம் முதலில் முன்வைத்த முறைப்பாட்டில் பங்குகள் கையகப்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே நாம் குறிப்பிட்டிருந்தோம். அந்த பங்குகளின் இன்றைய பெறுமதி 11 கோடிகளாகும். அத்துடன், பிரயன் ஷெடிக் முதலீடு செய்த மற்றுமொரு வியாபாரமும் இருந்தது. உதய கம்மன்பில மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றைய பணிப்பாளரும் இணைந்து அவரின் உரிமைகளை வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலைத் தொழிற்சாலையொன்று மத்துகம வலல்லாவிட்ட பகுதியிலுள்ளது. அந்த தேயிலைத் தொழிற்சாலையை 190 மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளனர். அதற்கான அனைத்து ஆவணங்களையும் நான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளேன். இது தொடர்பான விசாரணைகள் நிறைவுற்றுள்ள போதிலும் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.