புதியவை

டிசம்பர் மாதம் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பாராட்டைப்பெற்ற ஐந்து கவிதைகளும் கவிஞர்களும்01 -தடாகம் 

கொஞ்சும் இலக்கியம்
அன்னங்கள் நீந்திய
அழகியத் தடாகம்
அன்றே கண்டான்
புகழேந்தி - நம்
எண்ணங்கள் நீந்திடும்
இலக்கிய தடாகம்
இன்று காண்கிறோம்
புகழ் ஏந்தி
பன்டைய இலக்கியம்
படைத்த கவிஞன்
மரபால் கவிதைக்கு
மாலையிட்டான்
இன்றைய இலக்கியம்
வளர்க்கும் கவிஞன்
கவிதைக்கு புதுமையில்
களம் அமைத்தான்
பனியில் இலைகள்
பாடம் படிக்க
பார்க்க எம்மை
வியப்பூட்டும்
அணியுடன் கலந்தால்
தமிழும் எம்மை
அழகாய் பார்த்து
கண் சிமிட்டும்
விந்தை விந்தை
இலக்கிய விந்தை
பார்ப்பதில் கேட்பதில்
சுவையுண்டு- அது
பாட்டாய் கவிதையாய்
படைப்பில் வந்தாள்
படைப்பவர் திறமைக்கு
உயர்வுண்டு.
கொஞ்சும் தமிழை
கொஞ்சம் அள்ளி
அழகாய் அடியாய்
ஆடையிட்டு...
மிஞ்சும் கவிதையில்
மெருகூட்ட..
எம்மை மிஞ்சிடும்
இனிய தடாகமே.
தன்னையும் வளர்த்து
தமிழையும் வளர்த்து
மண்ணையும் வளர்க்கும்
தடாகமே - உன்
தமிழ் பாட
உலகமே இன்று
கழகங்கள் அமைக்குது
முகநூலில்.
செம்மொழி என்றும்
நம்மொழி தானென
சிறப்புடன் போற்றும்
தடாகமே
அம்மொழி அழகை
அகிலம் அறிந்திட
ஆக்கமும் ஊக்கமும்
உன் பணியே.
ஓரின எதுகை
ஓரின மோணை
எதுகையும் மோணையும்
கைகோர்த்து
எழுத்தால் உயர்ந்த
எத்தனை கவிஞன்
இறந்தப்பின் வாழ்கிறான்
எம்மோடு..
தடாகம் என்ற
இலக்கிய வட்டம்
தமிழை வளர்க்கும்
களமேடு - அது 
தரணியில் என்றும்
தரமாய் வாழ
தமிழையும் சுவைக்க
நீ நாடு.

இரா.இராஜகோபால்


02 -வாழ்க நீ தடாகமே

கலைத்தாய் சுமந்து வந்த
கதிரவனே கலைப்பூவே
கனநாட்கள் தொலைந்திருந்த
என்போன்ற கவிஞர்களின்
கண்ணீரை நீ துடைத்தாய்
தடாகமே கலைத்தாயே.
வேசத்துக்கு கலர்பூசி
பாசம் என்று காட்டுவோர் முன்
உன் பாசத்தைகொட்டி நீ
வேசத்தை வென்று விட்டாய்
தடாகமே கலைத்தாயே.
வறுமை என்னை விற்றதோ?
பாலைவன நாட்டுக்கு - இல்லை
வழிமாறி வந்தேனோ?
தாய் இல்லாத வீட்டுக்கு.
என்றுபல ஆண்டுகள் கண்ணீறுடன்
வாழ்ந்த என்னை.
கலைத்தாயாய் நீ வந்து
என் தலையையும் தடவி விட்டு
கண்ணீரையும் துடைத்து விட்டு
என் கற்பனைக்காவியத்தை
உலகறிய செய்தாயே
வாழ்க நீ தடாகமே கலைத்தாயே.
தென்றலிடம் வாழ்த்து ஒன்று
அனுப்புகிறேன் -அதை
வாங்கி நீ எடுத்து விடு.
என் கண்ணீர்த்துளி அதில் தெரியும்
அது சோகமல்ல ஆனந்தம்
வாழ்க நீ பல்லாண்டு
தடாகமே கலைத்தாயே.

 பொத்துவில் றஷீத்


03 -கவித்தடாகம்

கலைநூறு வளர்த்திங்கு
கருத்தோடு கவிபாட
நிலையில்லா இன்பத்தில்
நாளெல்லாம் நாம்பாட

நினைத்தாலே இனிக்கின்ற
இணையில்லாத் தடாகத்திற்
கிணையேது இவ்வுலகில்
ஈடில்லா இன்பம்தர

நமக்குள்ளே என்றின்றி
நனியெங்கும் நற்றமிழால்
கமழ்கின்ற தடாகத்தில்
கவிபாடி மகிழ்வோரே

தவமாக நாம்பெற்ற
தடாகத்தில் காலூன்றி 
அவமான மில்லாமல்
அரும்பாக்கள் புனைவோமே

படைபோலக் கவிஞர்கள்
பலவாறு இருந்தாலும்
இடைபோட்டு அன்னவரை
இனங்கண்டு பாராட்டி

நடைபோடுந் தடாகத்தை
நாமென்றும் மறவோமே
கிடைக்காத இன்பத்தைக்
கிடைத்ததிலே பெறுவோமே

தமிழ்கூறும் நல்லுலகில்
தளைத்தோங்குந் தடாகத்தில்
தமிழ்பாடும் பாவலர்கள்
தரத்தோடு கிடந்தலர்ந்து

புவிபோற்றும் பாவலராய்
புகலோங்க வேண்டுமெனக்
கவிபாடும் எனக்குள்ளே
கனிவான ஆசைகளே !!

ஸிமாரா அலி
"ஊதாப்பூ " 04 -தடாகம் 
-------------
கருக்கம் குவலயம் மேல் ஓடிடும் சுந்தரம் காண் 
சருகு பொதிகை பனியை துவைக்கும் தந்திரம் யாண் 
அருணோதயம் முகம் பார்க்கும் நீரணை சிறுமாலை 
உருவிலி சுரதம் காணும் நீராடும் தடாகம் பாராய் 

மைமை மருமத்தில் முட்டு வரால் கன்றென்று 
ஆமை தவழ்தலில் ஓடு மேல் குரகம் நின்றிட 
இமை திறக்கும் கட்செவி புறனில் கூர்முள்ளொன்று 
சமைக்கும் ஐயறிவு விந்தை நிறைந்த தடாகம் பாராய் 

தித்தி நயம் பாடும் சிறைக்குள் மடந்தை மஞ்சள் கரைந்திட 
சுத்தோதம் தீவுக்குள் எழிலாய் பூக்கும் செங்கமலம் 
பத்தல் வழியே பச்சை வயலுக்குள் நெல்மணி சிரித்திட 
வித்து முளைக்க நீர்க் கொடை அளிக்கும் தடாகம் பாராய் 

செங்காழ் நாராய் புறங்காழ் நோக துள்ளிக்குதித்திட 
இங்கிதத் தூது தேடும் புறவு அயர அல்லிக்குளத்தருக 
பூங்கா வாசம் நுகர்ந்த சிட்டுக்கள் தாகம் தீர்த்திட 
வங்கணம் பாட ஓயாமல் திரை ஆடும் தடாகம் பாராய் 

புறவெளி மதியும் நாட்காட்டி புரள்தலில் சில நாள் தேயும் 
அறவழி நதியும் மானுட குலம் வாழ்ந்திட பல நாள் பாயும் 
கறவை மடியில் அருகம் புல் சுமை குடம் நிறைய பாலாய் 
உறைந்தை மாறாமல் குல்லகப்பிணி சுகமாக்கும் தடாகம் பாராய் 

கவிஞர் மு.ஹ.மு.ஸர்பான்


05 -தடாகம்"

தாமரை அல்லி எனும் பல மலரும் சிரித்துக் கொழிக்க வளர்க்கும்..

ஆதவன் இரவியோடு கோள்களெலாம் (நிழலாய்) தாங்கிப் பிடிக்கும்...

பல்லாயிரம் உயிர்கள் பல்கி பெருகி செழிக்க உவக்கும்...

உயிர் நீராம் தாய் தமிழை என்றென்றும் தழைக்கக் காக்கும்..

தடாகமெனும் இத்தமிழ் தடாகம்..

உலகத் தமிழ் கூறும் நல்லோருக்கு 
ஓர் படாகம்...

# செந்தாமரைக்கொடி...#

: ஹேமா முரளிதரன் தூத்துக்குடி, இந்தியா.
.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.