புதியவை

புதிய கட்சி உருவாக்கம் தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி


சில எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் புதிய கட்சியொன்றின் உருவாக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கேள்வி: புதிய கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பில் தற்போது அதிகமாகப் பேசப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன:  ஆம்,  நாட்டில் அவ்வாறு பேசப்படுகின்றது. எனினும், அவ்வாறானதொரு தீர்மானத்தை நாம் இன்னும் எடுக்கவில்லை.
கேள்வி: அதாவது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தனியாக ஒரு கட்சியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடுகின்றார்களா?
பந்துல குணவர்தன: இல்லை, எம்மிடத்தில் அவ்வாறு கலந்துரையாடப்படவில்லை. கட்சி தொடர்பிலும் அரசியல் விவகாரங்கள் தொடர்பிலுமே கலந்துரையாடப்படுகின்றது.
கேள்வி:  வாரியப்பொலயிலுள்ள வட மேல் மாகாண சபை உறுப்பினர் டி.பி. ஹேரத்தின் வீட்டில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் பசில் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். கட்சியொன்றை உருவாக்கி அதற்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமைத்துவம் வழங்க முன்வரவுள்ளதாக மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன குறிப்பிட்டிருந்தார். இது குறித்து நாம் மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்ட போது, அதுவொரு கட்டுக்கதை எனவும் ஊடகங்களே அதனை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பந்துல குணவர்தன:  ஆம்,  மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தொடர்ந்தும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களித்த 57 இலட்சம் மக்களையும் பொதுத் தேர்தலின் போது வாக்களித்த 47 இலட்சம் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
கேள்வி:  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் தனியானவொரு கட்சியை உருவாக்குவதற்கு நீங்கள் விரும்புகின்றீர்களா?
பந்துல குணவர்தன:  வாக்களித்த மக்கள் கோரினால் அதன்படி செயற்படுவோம்.
கேள்வி: தனியானவொரு அரசியல் பிரவேசம் அவசியம் எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டிருந்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்வதற்கு மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பந்துல குணவர்தன:  அவர் தனியானவொரு கட்சியில் இருக்கின்றார்.
கேள்வி:  அவரது அந்தக் கருத்திற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் என்ற வகையில் நீங்கள் பொறுப்புக் கூறப்போவதில்லையா?
பந்துல குணவர்தன: லங்கா சம சமாஜக் கட்சியின் கருத்து தொடர்பில் அந்தக் கட்சியே பொறுப்புக் கூற வேண்டும்.
கேள்வி:  அனைத்து ஊடக சந்திப்புக்களிலும் நீங்கள் அனைவரும் கலந்துகொள்வதில்லை அல்லவா?
பந்துல குணவர்தன:  இல்லை
கேள்வி:  அதாவது பாராளுமன்றத்திலும் இங்கும் மாத்திரமா ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக செயற்படுகின்றீர்கள்?
பந்துல குணவர்தன:  இல்லை, இது நாட்டின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாகும்.
கேள்வி:  அவ்வாறு என்றால் வாசுதேவ நாணயக்கார?
பந்துல குணவர்தன: அவருக்கு அவருடைய நிலைப்பாட்டில் இருக்க முடியும். அவருக்கு அந்த உரிமை இருக்கின்றது.
கேள்வி:   அப்படியாகவிருந்தால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை நாம் எவ்வாறு தெரிவு செய்வது?
பந்துல குணவர்தன:  நீங்கள் தெரிவு செய்யுங்கள். முடியாவிட்டால் விடுங்கள்.
கேள்வி:   நாட்டிற்குக் கூறுவதற்காக நாம் தெரிவு செய்ய வேண்டும் அல்லவா?
பந்துல குணவர்தன: வேறு நிலைப்பாட்டையே நாம் நாட்டுக்குக் கூறுகின்றோம். அந்நியசெலாவணிக்கு என்ன நடந்துள்ளது,  நாட்டு மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே நாம் கூறுகின்றோம்.
கேள்வி:   நீங்கள் கூறும் அந்த பொருளாதார சமூக விடயங்களைப் போன்று அரசியல் விவகாரங்களும் நாட்டு மக்களுக்கு முக்கியம் அல்லவா? —
பந்துல குணவர்தன:  ஆம்,  இது அரசியல் விடயங்கள் அல்லவா?
கேள்வி:  நீங்கள் கூறும் கருத்துக்களை மாத்திரம் அறிக்கையிடுவதற்காக நாம் இங்கு வரவில்லை. நாம் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் வழங்க வேண்டும்.
பந்துல குணவர்தன: அவ்வாறாக இருந்தால் உங்களுடைய கேள்வியைக் கேளுங்கள்.
கேள்வி:  அதனை அல்லவா இவ்வளவு நேரமாகக் கேட்டோம்.
பந்துல குணவர்தன: வாசுதேவ நாணயக்காரவின் கட்சி தனியான நிலைப்பாட்டிலுள்ளது.
கேள்வி:  அதாவது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நீங்கள் அதற்கு பொறுப்புக் கூறுவதில்லையா?
பந்துல குணவர்தன:  நாம் கூறும் கருத்துக்களுக்கு நாம் பொறுப்புக் கூறுவோம். நான் வாசுதேவ நாணயக்கார அல்ல.
கேள்வி:  நாம் அதனை அறிவோம், அதுவல்ல பிரச்சினை . ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் உங்களிடமொரு கொள்கை இருக்கும் அல்லவா?
பந்துல குணவர்தன:  ஆம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஒரு கொள்கை இருக்கின்றது.
கேள்வி:  ஆறு கட்சிகளும் தனித்தனியாக ஊடக சந்திப்புக்களை ஏற்பாடு செய்து தங்களது வெவ்வேறான கருத்துக்களை உங்களின் கொள்கையின் படி தெரிவிக்க முடியுமா?
பந்துல குணவர்தன: இல்லை, முடியும், அது அவர்களின் நிலைப்பாடு. கொள்கை அல்ல.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.