புதியவை

அந்நிய மீனவர் பிரவேசத்தைத் தடுக்கும் சட்டத்தை தற்காலத்திற்கேற்ப தயாரிக்க குழு நியமனம்

அந்நிய மீனவர் பிரவேசத்தைத் தடுக்கும் சட்டத்தை தற்காலத்திற்கேற்ப தயாரிக்க குழு நியமனம்இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை, தற்காலத்திற்குப் பொருத்தமான வகையில் தயாரிப்பதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய மீனவர் படகுகள் தொடர்பான விதிமுறைகள் சட்டத்தின் கீழ், நான்கு மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தினால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிசிர டி ஆப்ரூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீது இன்று மேன்முறையீடுகள் கோரப்பட்டன.
இதற்கு முன்னர் இதேபோன்ற ஒரு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதாரர்கள், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் அல்லாது, அந்நிய மீனவர் படகுகள் தொடர்பான விதிமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, மனுதாரர்களான அந்த மீனவர்கள், குறித்த தீர்மானத்திற்கெதிராக பின்னர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.
இந்த மேன்முறையீடு உயர்நீதிமன்றத்தினால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் விக்கும் டி ஆப்ரூ சுட்டிக்காட்டினார்.
அந்நிய மீனவர் படகுகள் மீதான விதிமுறைகள் சட்டம் தற்காலத்திற்குப் பொருந்தாத காரணத்தினால், அமைச்சரவை உபகுழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் வரை மேன்முறையீட்டைப் பிற்போடுமாறும் பிரதி சொலிஸ்டர் நாயகம் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய, இந்த விவகாரம் தொடர்பிலான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.