புதியவை

ஷிகர் தவான், விராட் கோஹ்லி அபாரமாக ஆடியும் தோல்வியடைந்தது இந்தியா

ஷிகர் தவான், விராட் கோஹ்லி அபாரமாக ஆடியும் தோல்வியடைந்தது இந்தியா
ஷிகர் தவானும், விராட் கோஹ்லியும் சதங்களைக் கடந்தும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது போட்டியில் இந்தியாவிற்குத் தோல்வியே எஞ்சியது.
கென்பராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக டேவிட் வோனர் 93 ஓட்டங்களையும், ஏரோன் பிஞ்ச் 107 ஓட்டங்களையும் பெற்றனர்.
முதல் விக்கெட்டுக்காக 187 ஓட்டங்களைப் பகிர அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 29 பந்துகளில் 51 ஓட்டங்களையும், கிளென் மெக்ஸ்வெல் 20 பந்துகளில் 41 ஓட்டங்களையும் விளாசினர்.
அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ஓட்டங்களைக் குவித்தது.
வெற்றி இலக்கான 349 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்தியா, 65 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
விராட் கோஹ்லியும், ஷிகர் தவானும் அபாரமாக ஓட்டங்களைக் குவித்ததுடன் அடுத்தடுத்து சதங்களையும் கடந்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உண்டாக்கினர்.
இரண்டாம் விக்கெட்டுக்காக 212 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில், ஷிகர் தவான் 126 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
என்றாலும், அதன் பின்னர் ஆட்டத்தின் போக்கை மாற்றிய அவுஸ்திரேலியா கடைசி 8 விக்கெட்டுகளையும் 46 ஓட்டங்களுக்கு வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கியது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.