புதியவை

வெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு செல்ல முயன்ற மாணிக்கக்கல் வியாபாரி கைது

வெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு செல்ல முயன்ற மாணிக்கக்கல் வியாபாரி கைது



சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை நாட்டிலிருந்து கொண்டு செல்ல முயற்சித்த மாணிக்கக்கல் வியாபாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியைச் சேர்ந்த 55 வயதான மாணிக்கக்கல் வியாபாரி நாணயத்தாள்களை சிங்கப்பூருக்குக் கொண்டு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக சுங்கத்திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயங்களின் பெறுமதி 61 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.