புதியவை

ஒரு பனித்துளியின் கதை - பஸ்மினா ராஸிக்
அதிகாலை நேரத்து
அமைதியானதொரு சாலையோரத்து
புல்வெளி அது ..
புத்தம்புதிதான பனித்துளியொன்று
கம்பீரமாய் வந்தமர்ந்தது
புல்லிலையின் ஓர் ஓரமாய் ..
பனித்துளியின் வரவு கண்டு
பாசமுடன் பார்த்து ,
பெருமையுடன் தாங்கிக் கொண்டது இலை ..
தனக்கென்று இடமின்றி
இலை தேடி வந்ததினால்
தரக்குறைவாய்
எண்ணியதோ பனித்துளி
வாய்ப்புக்காய் காத்திருந்தது
வம்பிழுக்க ..
அப்போது .....
பெருமையுடன் வீற்றிருந்த
புல்லின் மேல் பனித்துளி
புகைப்படக்காரன் ஒருவனின்
புலன்களுக்குள் சிக்கிவிட ..
கிளிக் என்று நா நீட்டி
லபக் என்று விழுங்கியது ,
கெமராவின் வில்லைகள் ..
பசித்திருந்த பாலகன் பால் கண்ட முகமாய்
ரசித்திருந்தே சென்றான் புகைப்படக்காரனவன் ..
சந்தர்ப்பம் காத்திருந்த
பனித்துளிக்குக் கிடைத்தது அவல்..
பெருமையின் இறுமாப்பில்
புலம்பியது பனித்துளி ..
"ஆயிரம் இலைகளிங்கே
உனைச்சுற்றி வளர்ந்திருக்க
நானமர்ந்த இலைமட்டும்
கமராவுக்குள் சிக்கியதன்
கரணம் தான்
புரிந்து விட்டதா
புல்லினமே?"
பனித்துளியின் காதோரம்
ரகசியமாய்ச் சொன்னது புல்
"பெருமையுடன் துள்ளிய யாரும்
பாரில்
பலகாலம் வாழ்ந்த்தது இல்லை
இலையில் தங்கிய பனித்துளி வாழ்வு
கடற்கரை மணல் ஓவியம் போல "
சொல்லி முடிப்பதற்குள்
முரட்டுச் சூரியன்
முகம் காட்டியதில்
மூன்றே நிமிடங்களில்
மாயமாய்
மறைந்தே போயிற்று ..
பாவம்
அநதப் பனித்துளி .
..

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.