புதியவை

பதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மானிய அடிப்படையில் மக்களுக்கு விநியோகம்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மானிய அடிப்படையில் மக்களுக்கு விநியோகம்
வெலிமடை மற்றும் பொரலந்த பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள், மானிய அடிப்படையில் இன்று மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 178 உர மூட்டைகள் கடந்த வார இறுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டிருந்தன.
50 கிலோகிராம் நிறையுடைய 178 உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி 6,23,000 ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவருக்கும் தலா 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட உர மூட்டைகளை கமநல சேவை நிலையங்கள் ஊடாக மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை நுகர்வோர் விவகார அதிகார சபையின் நிதியத்தில் வைப்பிலிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஆரம்ப கட்டமாக கெப்பிட்டிபொல கமநல சேவைகள் நிலையத்தினால் விவசாயிகளுக்கு இன்று உரமூட்டைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.