புதியவை

தமிழ் மக்களின் நிலங்களை மீளப்பெற்றுக்கொடுக்க மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும்

தமிழ் மக்களின் நிலங்களை மீளப்பெற்றுக்கொடுக்க மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் 


இலங்கையில் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் நிலங்களை மீளப்பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ரோசய்யா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் ஆரம்பமாகியது.
கூட்டத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர், இலங்கை அரசு நீதியை நிலைநாட்டுவதற்கு மத்திய அரசு தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ் மக்களுக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது சட்டமன்ற உரையில் ஆளுநர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் இலங்கையில் நீதியுடனும் கண்ணியத்துடனும் வாழ வழியமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கச்சத்தீவை மீட்டு இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் ரோசய்யா வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசும் இலங்கை அரசாங்கமும் இணைந்து மீனவர் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் என தாம் நம்புவதாகவும் தமிழக ஆளுநர் குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.