புதியவை

டோனி ஃப்ரெட்ரிக்சனின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மரக்கிளை சிற்பங்கள் (Photos)

டோனி ஃப்ரெட்ரிக்சனின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத  மரக்கிளை சிற்பங்கள் (Photos) 
தென்னாப்பிரிக்க சிற்பக்கலைஞர் டோனி ஃப்ரெட்ரிக்சன் (Tony Fredriksson) காய்ந்து விழும் மரக் கிளைகள், குச்சிகளை வைத்து அற்புதமான உருவங்களை வடிவமைத்து விடுகின்றார்.
உலோகத்தையோ, கற்களையோ செதுக்கி உருவங்களை வடிவமைக்காமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த சிற்பங்களை உருவாக்க நினைத்த ஃப்ரெட்ரிக்சன், காடுகளில் காய்ந்து விழும் குச்சிகள், மரக் கட்டைகளை வைத்து 2007 ஆம் ஆண்டு முதல் அழகிய சிற்பங்களை உருவாக்கி வருகின்றார்.
‘‘எந்த மாதிரி உருவத்தை உருவாக்கப் போகிறேன் என்பதை முடிவு செய்துகொள்வேன். அதற்குச் சில குறிப்புகளை எடுத்துக்கொள்வேன். பிறகு காட்டுக்குள் காய்ந்த குச்சிகளைத் தேடி அலைவேன். ஒவ்வொரு குச்சியை எடுக்கும்போதும் அது எந்தப் பகுதிக்குப் பயன்படுத்த முடியும் என்று யோசித்து வைத்துக்கொள்வேன். அளவு, வடிவம் என்று பிரித்து தனித் தனிக் குச்சிகளாக சேர்த்துக்கொள்வேன். பிறகு உருவங்களை உருவாக்கிவிடுவேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.
நாய், காண்டாமிருகம், நெருப்புக்கோழி என ஏராளமான உருவங்களைச் செய்து அவரது அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றார்.
கற்பனைத் திறன் இருந்தால் யாரும் இதனைச் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார் டோனி ஃப்ரெட்ரிக்சன்.

OLYMPUS DIGITAL CAMERA  tumblr_nzggktmw4F1qccpz7o1_1280untitled-4

11855785_904760056270056_4462777057388111265_n 600x464xTony-Fredriksson-driftwood9-600x464.jpg.pagespeed.ic.wGUg9ELPEt
OLYMPUS DIGITAL CAMERA 3

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.