புதியவை

கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் இன்று காலமானார்


கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரும் மற்றும் பல சமூக அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினருமாகிய முத்தையா கதிர்காமநாதன் சற்று முன்னர் (இன்று 02.02.2016 செவ்வாய்க்கிழமை) காலமானார். இறுதிச் சடங்கு வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச்சங்கக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இதய அதிர்ச்சியால் திடீரென மயக்கமுற்ற இவர் டேடன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

 பின்னர் றோயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முதல் சிகிச்சை வழங்கி வந்தனர்.

நயினாதீ வை  பிறப்பிடமாகக் கொண்ட இவர் அதியுன்னத உழைப்பாளி. தொழிலதிபராக வாழ்ந்து பணம்மீது காதல் கொள்ளாது சமூகப் பணிகளைக் காதலித்தார்.

 இதனால் தொழில் முயற்சிகள் மூலம் பெற்ற வருவாய் போதுமென நிறுத்தி முழுநேரச் சமூகத் தொண்டனாக மாறினார்.

கலை இலக்கிய உள்ளங்களை  ஆதரிக்கும் பண்பு இவரது சிறப்பம்சம் ஆகும்.

எப்போதும் சிரித்த முகத்துடன் தோன்றுவதும் சிரித்தபடியே சவால்களை எதிர்கொள்வதும் இவரது தனித்துவங்கள்

கதிர்காமநாதன் அவர்களின்  ஆன்மா சாந்தியடைய தடாகத்தின் பிராத்தனைகள்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.