புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் ஜனவரி மாதம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கு பற்றி மூன்றாம் இடத்தைப் பெற்று கவின்கலை பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் செந்தாமரைக் கொடி
"மனிதாபிமானம்"

ஓரரும்பு சருகாகி..
அலைகடலின் ஓரத்தில் சாய்ந்து கிடக்கயிலே..
கசியாத கல் மனங்களெல்லாம்
கசிந்துருகி கலங்கியும்..
மனத் தாக்கமுறாத, உலகத்தாருக்கு
உவர்மண்ணாய் மனிதாபிமானம் .

.
சின்னச் சின்ன சவப்பெட்டி சுமந்த
 இறுகிய முகங்கள்
, நகர வீதிகளில் நடந்து,
 கல்லறையை அடைந்த கோரங்கள்
.கண்டும் துடிக்காத அந்நாட்டில்
சவமாய் மனிதாபிமானம்..

எத்தனையோ உடல்கள் சிதறி
சதைத் துணுக்கும் குருதியும்.
சுவற்றில் பொட்டிட்டும்.
செஞ்சாந்து கோலமிட்டும்.
இன்னுமாய் தூறாத
கொடும்பாலை மழையாய்
மனிதாபிமானம்

..
மிகச் சிறிய பலமற்ற சகோதரனை
அதிரடியாய் தாக்குவதும்
குடும்பங்கள் சிதைப்பதும்.
 மரண ஓலம் ரசிப்பதும்.
.பண்பைப் புரட்டுவதும்.
 ஒரு நாட்டில், எப்பொழுதோ
 மரித்து விட்ட மனிதாபிமானம் .

.
அடுத்த வேளை சோற்றுக்கே
அல்லலுறும் தொழிலாளி..
பேரிடரின் ரணம் ஆற்ற பாய்ந்து
புறப்பட்டதுவே பார் போற்றும்
பண்பான மனிதாபிமானம்.

.
மதம் மாற்றும் சூழ்ச்சியோ..?
 வார்த்தை வாட்கள் சகித்து..
உதவிகள் தொடர்ந்து.
.பல்லாயிரம் உயிர்கள் காத்த
 அன்பதுவே மா மனிதாபிமானம்
..
வளர்ப்புப் பிராணி
பெற்றிட்ட பாக்கியம் கூட இல்லாமல்
பல்லுறவாய்.
.உன் கூடவே வாழ்கிறாளே பெண்.
.அவளின் வலி அவசியம் அறிந்து கொள்
 அதுவே அடிப்படை மனிதாபிமானம் ..

காசு பணம்
சொத்து சுகம்
 சொந்த பந்தம்
 சுவர்க்கம் சேர்க்காது..
நாம் செய்த நன்மைகளே சாட்சி பகரும்
.எனும் நினைவு வரின்,
என்றும் நெஞ்சில் நிறையுமே மனிதாபிமானம் ..

செந்தாமரைக் கொடி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.