புதியவை

உணர்வு பெறு - பசீர் ஜமால்டீன்


சிறாரை கையிலேந்தி
சிறகுடைந்த பறவையாகி
தத்தி தடுமாறி
ஊரறியாது உறவறியாது
ஊரைவிட்டு மயிரிழையில்
உயிர்பிளைக்க ஓடுவதா
மார்க்கம்
இம்மையிலும், மறுமையிலும்
இணையில்லா கருணைபெற
வாழ்வதற்கு வழிகாட்ட
வந்ததிந்த மார்கமல்லோ
சின்ன சின்ன
பிரிவுகளாய் சிதைத்து
சின்னா பின்னமாக்காதீர்
வாழ்வளித்து வாழவைக்க
வள்ளல் நபி காட்டித்தர
வாழ்வழித்து வாழ்வுகாட்ட
வழித்தோன்றல் சொல்லலியே ...!
வருடிகள் வழிப்பட்டு
வாழ்வழிக்கிறாய் வழிதவறி
வாய்த்திட சொல்வாரற்று
வதிவிடமிழந்து தவிக்குதடா
நம் சமூகம்
பாரசீகம் பரிதவிக்க
சிரியா சிக்கித்தவிக்க
எமனில் எமன் விளையாட
எவனோ ஏவி விட்டு
வெடிமருந்து விற்று
வேடிக்கை பார்த்திருக்க
வேண்டாத வேலையினை - நீ
விருப்புடனே செய்வதேனோ.....?
வசந்தகால குளிரடிக்க,
தாயும் சேயும்
இருவருமே போர்வையின்றி
அன்னையின் அபாயாக்குள் - சேய்
அடைக்கலம் தேடக் கண்டும்
கலக்கமுறா மனங்களே .....!
நீர் காட்டப்போகும்
பாதை எங்கோ .....?
மருத்துவம் சொல்லும் மகத்துவம்
உணர்வற்ற தேமல்
தொழுநோயை உண்டுபண்ணும்
உணர்விழந்து நீர் வாழின்
உன்சமூகம் அழிந்து போகும் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.