ஒரே நாடு பெரும் சக்தி' எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வும், மருந்தகம் திறந்து வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட வைத்தியஅதிகாரி டாக்டர் என். ஆரிப் அவர்களது உரை வைத்தியசாலையின் குறை பாடுகளை நிறைவேற்றி தருமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் கேட்டுக் கொண்டார்
தரமான ஒரு மாவட்ட வைத்தியஅதிகாரி தன் பிறந்த மண்ணுக்கு கிடைத்தது கூட ஒரு வரம் தான்
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், வைத்தியசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் றியாத் ஏ.மஜீத், ஆகியோர் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் வைத்தியசாலையினை தரமுயர்த்துதல் தொடர்பான மகஜரினை வைத்தியசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் றியாத் ஏ.மஜீத் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீருக்கு மாவட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினர் இணைந்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.