புதியவை

உன்னை மட்டும் - மு.யாகூப் அலி


அழுக்கு சுந்தரி
அழகு புன்னகை
அழுத்தமாக பதுங்கிபுட்டா
அத்த பெத்த மகதான்.
இவ எனக்கென்று சமஞ்சவதான்
இனி இவனுக்கு சமைப்பவதான்.
எனக்கென்னு தான் பொறந்தவனே
என்னை சுற்றும் வண்டினமே
உனக்குன்னுதான் உசுருன்னுதான்
உள்ளம் கிடக்குது உயிரும் மிதக்குது.
நான் இருப்பது உனக்காக கன்னியாக
நீ உழைப்பதும் நமக்காக தண்ணியாக.
நமக்குன்னு நல்ல நாளு
நந்தவன பூக்கும் நாளு.
நானும் நீயும் பிறந்ததே
நம்மோளட வாழ்க்கைக்கு.
நீ காத்திரு மானே
நான் உனக்கானவன் தானே .
நீ சிரிக்கும் மீனே
நான் நீரினம் தானே .
உன்னாலே உழைச்சேன்
என் உசுருக்குள் புதைத்தேன்.
தன்னால கண்ணால
கண்ணடிச்சு கவுந்தேனே.
என் கருவுக்குள்
உன் உசுரு சிசுவா கிடைக்கணும் .
அந்த சிசுவுக்கு அப்பனாக
இந்த ஜென்மத்துல நிலைக்கனும் .
தலைக்கு பூவுமில்லை
தலைவா புன்னகை செய் .
கழுத்தில் நகையில்லை
உன் கரத்தில் மாலையிடு.
நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
உன்னை மட்டும் வேண்டிக்குவேன் .
நீ சிரிக்காத நாளுக்கெல்லாம்
என் மனச அள்ளி தந்திடுவேன் .
நீ கிடச்சா போதும்
நான் வாழ்வேன் எப்போதும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.