புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் ஜனவரி மாதம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் பெற்று கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் டாக்டர் என் ஆரிப்தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் ஜனவரி மாதம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கு பற்றி முதலாம்  இடத்தைப் பெற்று  கவியருவி  பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் டாக்டர் என் ஆரிப் 

மனிதாபிமானம்
**********************
மனிதத்தை எப்போதோ தொலைத்து விட்டு
மனிதனைத் தேடும் இவ்வுலகில் 
மனிதாபிமானம் எங்கே கிடைக்கும்
தடாகத்தின் தலைப்போ காலத்தின் தேவை.

உறவுகளை உறவுகளாகப் பார்க்காத 
இவ்வுலகில் மனிதாபிமானமா
நண்பர்களை நண்பர்களாகப் பார்க்காத
இப்பாரினில் மனித நேயமா.

நான் நான் என்று அகங்காரமாய் 
நாமென்பதைத் தொலைத்து விட்டு 
எங்கேயோ பயணிக்கும் மனிதர்கள்
மனிதாபிமானத்தை எங்கே தேடுவது.
செல்லுமிடமெல்லாம் தன்னிலை மறந்தார் கூட்டம் 
தான் வாழப் பிறர் நலன் மறந்தார் கூட்டம்

மனிதா அபிமானமா அப்படியென்றால்
என்னென்று கேட்கும் மதியிழந்தார் கூட்டம்.
மனிதத்தை மனிதன் காவு கொண்டு 

நேயத்தை நேசமில்லாது மரணிக்கச் செய்து 
தன்னிலை மறந்து தாண்டவமாடும் மனிதா
மனிதாபிமானத்தை எங்கே தேடப் போகிறாய்.

தானுயர அடுத்தவனும் உயரனுமது மனிதாபிமானம்
தானுயராவிடினும் அடுத்தவனுயர்வதா என்பதும்
அடுத்தவனுயரா தான் மட்டுமுயரனும் என்பதும்

மனிதாபிமானத்தின் மறுவடிவமன்றோ.
மனித நேயத்தை மறந்து குழி 
பறிக்கும் மானிடர் நிறைந்திருக்க
மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என
உதாரணமாய் இன்னும் சிலர் வாழத்தான்
செய்கிறார்கள் மனிதாபிமானத்தை வாழவைக்க.

டாக்டர் என் ஆரிப்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.