புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் ஜனவரி மாதம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் நிலாவெளியூர் கெஜ-தர்மாதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் ஜனவரி மாதம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று  கவித்தீபம்   பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் நிலாவெளியூர் கெஜ-தர்மா 


மனிதாபிமானம்.

கீதம் இனிய குயிலே 
கேட்டிடு எந்தன் பாவை 
மனிதம் இங்கு மறைந்து 
மாக்களாய்ப் போனோம் நாம் 
புனிதம் இழந்து நாம் 
புழுவாய்ப் போனோம் காண்
புனிதராய் இங்கு ஒருவர் 
புதிதாய் வந்திடக் கூவாய் .

பார்தனில் பைந்தமிழ் ஓசை 
புகன்றிடும் பக்குவக் குயிலே 
யார்தான் இங்கு நல்ல
யாப்போடு கவி சொல்வார் 
பேர்தான் பெருங் கவிஞன்
பார்த்தால் அங்கொன்று மில்லை 
ஊர்தனில் பெரிய போடியாயின்
உன்னதக் கவிஞன் அவனேயாம்
மனதினில் எழுந்த உணர்வை 
மட்டிலா மகிழ்வுடன் நீயே 
தினமது பாடும் குயிலே 
திருந்திடச் சொல்லுறேன் உனையே
பணமது உள்ளவன் பாடலை 
பாசமுடன் பாடினா யாகில் 
பணமோ உனக்கு என்றும் 
பத்தாய்ப் பலதாய்ப் பெருகும்
மனிதாபி மானம் இங்கே 
மறைந்து நாளாய்ப் போச்சு 
புனிதர்கள் புறப்பட்டு விட்டார் 
புல்லர்கள் நிறைந்து விட்டார் 
இனிதாய் இம்மண்ணில் மீண்டும் 
இடர்கள் நீங்கி விடவே 
மனிதாபி மானம் தழைத்திட 
மறவாமல் குயிலே கூவாய்
கால்தனை இழந்தவனைக் கண்டு 
கவலை கொள்வா ரில்லை 
கால்தான் ஜெயப்பூர் எனில் 
கழட்டி வீசுவேன் என்கிறார் 
நூல்தனை விற்பனைக் கென்றால்
நுகர்வோர் யாரும் இல்லை 
வால்தான் உள்ள மிருகத்தின் 
வாஞ்சை கூட நமக்கில்லை
ஆலகால விஷம்போ லென்றும் 
அள்ளியே வீசுறார் வார்த்தை 
இலவுகாத்த கிளியாய் இங்கே 
இருக்கிறோம் மனிதாபிமானம் பார்த்து 
அலகுவடிவு கொண்ட குயிலே 
அரக்கர் மனம் மாறிப்போக 
இலகு தமிழால் என்றும் 
இடித்து உரத்துக் கூவாய்
 .
-நிலாவெளியூர் கெஜ-தர்மா -

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.