புதியவை

நட்பு - டாக்டர் நாகூர் ஆரிப்


தொப்புள் கொடியில்
தொடங்கியது
இறுதி மூச்சு
அடங்கும் வரையிலும்
நம்மோடு பயணிக்கும்.

விரும்பியும் விரும்பாமலும்
எதிர்பார்த்தும் எதிர்பாராமலும்
வெட்ட வெட்ட ஒட்டியும்
சகவாசமாய் சகியென
உயிர் வாழும்.
அன்பு பாசம்
ஆதரவு பக்கபலம்
இறுக்கம் ஒற்றுமை
ஈர்ப்பு கவனம்
உவகை மகிழ்ச்சி
ஊக்கம் ஒத்துழைப்பு
என்றும் அனுதினமும்
ஏமாற்றா இதயம்
ஐயம் கலவா
ஒழுக்கம் மிகையாய்
ஓம்பும் உறவே
நட்பு.
நண்பர்கள் அமைவதும்
வரமோ
என எண்ணிட வைக்கும்
நேரமோ சில.
உயிர் கொடுப்பான் தோழன்
நட்பின் சிகரமாய்
இனிதாய் அமைந்தால்.
தனக்கு ஒரு கண் போனால்
அடுத்தவனுக்கு போகனும்
ரெண்டு கண்ணும்
என்று நினைக்கும்
நண்பர்களுமுண்டாம்
இங்கே.
சுயநல உலகில்
எது நடந்திடினும்
சாகா வரமாய்
நட்பெனும் விருட்சம்
வெட்ட வெட்ட தளைத்து
கூட வருவது தான் நட்பு.
நட்பை மதியாதாரும்
நட்பின் பெறுமதி தெரியாதாரும்
சின்னச் சின்ன புத்தியாய்
நட்பை கொச்சையாக்குவாரும்
தாராளமாய் கிடைப்பார்.
தவறான புரிந்துணர்வால்
தவறிப்போகும் நட்பு
துரதிர்ஷ்டம் தான்.
சேருவது கடினம்
பிரிவது இலேசு
புரியாவிடின் கிலேசம்.
வாய்த்தால் நட்பு
இப்படி வாய்க்கனும்
மூக்கில் விரலை வைக்க
வேண்டும் நட்பு
புனிதமாய் நட்பு.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.