புதியவை

விழித்தெழு - ஆர் எஸ் கலா


பெண்ணே நீ விழித்தெழு
இருளைக் கிழித்தெழு
அறியாமையைத் தகர்த்தெழு
அறிவியலை இழுத்தெழு
கண்ணீர் அருவிகள்
தொலைத்தெழு.......\
அடிமைத் தனத்தை உடைத்தெழு
அன்பிற்கு அடி பணிந்திடு..
வம்பிற்குத் தலை நிமிர்ந்தெழு.......\
தலைக் கனத்தை கைவிட்டு
நம்பிக்கையை கையில் எடுத்து
உயர்ந்த இடத்தில் நிலைத்து நில்.....\
அதட்டல் மிரட்டல் உருட்டல் எல்லாம்
புரட்டிப் போட்டு படிப் படியாக படிப்பில்
உயர்ந்து நில் .......\
ஏற்ற தாழ்வுகளையும் முரண்பாடுகளையும்
மடக்கி கசக்கி சுறுட்டிப் போட்டு மகளிராலும்
முடியும் என்று நிரூபித்து விடு நல்ல
செயலில்...............\
நன்மைக்குத் தன்னடக்கம், நாவடக்கம் இவற்றைத்
துணையாக எடு ....
தீமைக்குச் சுட்டெரிக்கும் விழி கொண்டு
வெகுண்டு எழு ...........\
மனையாள மட்டுமே மனையாள்
என்ற தவறான கறையை கரம்
பிடித்தவன் நெஞ்சில் இருந்து
துடைத்து தூக்கிப் போடு........\
அன்பாலும் ஆதரவாலும் எடுத்துக் கூறி
வளைத்துப் பிடி உன் பிடியில் கணவனை
மடி கொடுக்க மட்டும் துணைவி இல்லை
பிடி கொடுக்கவும் என்று புரியவை.........\
புன்னகையில் பெண் ஒரு மலர்
தென்றலாகும் போது ஒரு மங்கை
கொன்றலாக தடவும் போது அவள்
ஒரு நல்ல துணைவி பொறுமை
இழந்தால் புயலாக மாறும் கண்ணகி என
உணர வை ஆண் ஆதிக்கம் கொண்ட
சிலருக்கு..............\
ஆணும் பெண்ணும் ஓர் உயிரே
பிறப்பும் இறப்பும் ஒன்றே என்று
உணரவை ஆனால் ஆணவத்தில்
ஆட்டம் போடாதே பெண்ணே
அதைஉன் உள்ளத்தில் இருந்து
தூக்கிப் போடு கண்ணே...........\
பாரதி கண்ட கனவு கலையாமல்
சிலையாகாமல் உயிர்த்தெழ வேண்டுமாயின்
நீ பாரதிப் பெண்ணாக விழித்தெழ
வேண்டும்......\

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.