புதியவை

முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு குரல்கொடுக்க,பகைமை மறந்து முன்வர வேண்டும் UK நாபீர் ஹாஜி அழைப்பு- umar lebbe Huthaumarஅண்மையில் ஏறாவூரில் நடைபெற்ற நாபீர் பௌண்டசன் ஏறாவூர் கிளை அமைத்து ஏழை மக்களுக்கான உலருணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ECM. (Pvt)Ltd பணிப்பாளர் நாயகமும் நாபீர் பௌண்டசன் தலைவருமான பொறியலாளர் உதுமான்கண்டு நாபீர் ஹாஜி கருத்து தெரிவிக்கும் போது நசுக்கப்படும் முஸ்லிம் சமுகத்தை மீண்டும் கட்டியெழுப்ப நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தனதுரையில் தமது சமுகத்தின் நலன்கருதி மக்களின் தலைவர்களாக உணரப்படும் எமது தலைமைகளின் ஒற்றுமை தற்போதைய காலத்தின் தேவையாக உணரப்படுகிறது என்பது சகலரும் அறிந்த ஒன்றே. தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூட்டாக இணைந்து பெற அந்த தலைவர்கள் போராடுகின்ற போது நமது தலைவர்களால் ஏன் முடியாது உள்ளது என கேள்விஎழுப்பினார். மேலும் 
மு.காங்கிரஸ் தலைவர் சகோ.ரௌப் ஹக்கீம் , ம.காங்கிரஸ் தலைவர் சகோ. ரிசாத் பதியுதீன் ,தே.காங்கிரஸ் தலைவர் சகோ.ALM.அதாவுல்லாஹ் ஆகியோர் அரசியல் போட்டிகள் மறந்து ஒற்றுமைப்பட வேண்டிய தேவை உள்ளது.எமது தேசிய தலைவர் மர்ஹூம் MHM.அஸ்ரப் காலத்தில்  எமது சமூகத்தின் குரல் எப்படி இருந்ததோ அதனை விட பல மடங்கு அதிகமாக இருக்க வேண்டிய தேவை இப்போது உணரப்பட்டுள்ளது. ஆகவே நாம் சகலரும் சகோதரர்கள் என்பதையும் ,எமது சமுகத்தின் தேவைகளை உரத்துக் கேட்க வேண்டியுள்ளதையும் நினைவில் கொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.
இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் MSS.சுபைர்,புத்திஜீவிகள்,சமய பெரியார்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.