புதியவை

பனிவிழும் மலர்வனம்"(தொடர் கதை)அத்தியாயம் 03 ரதி மோகன்பனிவிழும் மலர்வனம்"(தொடர் கதை)அத்தியாயம் 03   ரதி மோகன்
எல்லாமே இன்று நடந்ததுபோல். .....(தொடர்ச்சி)
மதிமதியின் அண்ணா மறைந்து/தொலைந்து பத்துவருடங்கள் கடந்துபோய் இருந்தது.மதுவின் அண்ணா மனோஜ் கலைப்பீடத்தில் யாழ் பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம். எப்பொழுதும் கலகலப்பாக இருப்பான். கலையின் மறுபெயர் அவனோ என பிரமிக்கத்தக்க விதத்தில் மிருதங்கம், வயலின் என வாத்தியங்கள் இசைத்தலோடு கர்நாடக சங்கீத த்திலும் தேர்ச்சிபெற்றிருந்தான். கவிதை எழுதுவதில் சின்னபாரதி என நண்பர்களால் அழைக்கப்பட்டவன். கலையோடு பயணித்ததால் என்னவோ தெய்வீக அழகு அவனோடு ஒட்டிக்கொண்டது.
ஒருநாள் அந்த பொழுதும் வழமையாகதான் அவர்களுக்கு விடிந்தது..மதுமதுயின் அண்ணன் ஒருகலைப்பயணத்திற்காக தென்பகுதியை நோக்கி பயணித்திருந்தான். எவருமே அன்று நினைத்திருக்கவில்லை . அந்த பயணம் மதுவின் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று.
தனது நண்பர்களுடன் தென்பகுதிக்கு சென்ற மனோஜ் திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான் . கைது ஊர்ஜிதம் செய்யப்படாததால் எந்த நடவடிக்கையும் வெற்றியளிக்கவில்லை. காணாமல் போனோர் பட்டியலில் அவனும் சேர்க்கப்பட்டான். அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது கேள்வியாகிப்போனது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள். துரத்தப்பட்ட வானில் உள்ள அனைவரும் சுடப்பட்டதாக. எது உண்மையோ பொய்யோ மதுமதியின் குடும்பம் அவன் உயிரோடு இருக்கிறான் எனத்தான் இன்றுவரை நம்புகிறது. மகனை இழந்த சோகத்தில் படுத்த படுக்கையாக சிலநாள் இருந்த தந்தையாரின் உயிரையும் மாரடைப்பு வடிவில் வந்து காலன் பறித்திருந்தான். அதன் பின்னே கருணை அடிப்படையில் அம்மாவின் தம்பி ( மாமா) அனுப்பிய ஸ்டுடன்ற் விசாவில் இரு வருடங்கள் லண்டனில் கல்விகற்று அதன் பின்பு டென்மார்க்கில் அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக ஒட்டிக்கொண்டாள்.
பலமாக கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. " மது மது கதவை திறவம்மா..அவன் தம்பியை பற்றி தெரியும்தானே. இதற்கு போய் பெரிசா அலட்டிக்கிறியே.. அவனுக்கு இந்த தமிழ்ச்சனத்தின்றை போக்கு பிடிக்கிறதில்லை.. ஒருத்தன் முன்னேறினாலே பொறுக்க முடியாத சனம் என்று சில கசப்பான அனுபவம்தான் சங்கரை இப்படி பேச வைச்சது.. அவன் ஒருநாளும் போராட்டத்தைபற்றி கொச்சைப்படுத்தப்படுத்தி பேசியதில்லையே... இஞ்சை உன்ரை படிப்பு முக்கியம்.. அதைவிட்டுவிட்டு படம், கவிதை என தமிழோடு மினக்கெடுகிறாய். உன்ரை நன்மைக்குத்தான் தம்பியன் சொல்லியிருப்பான்...வா முதலில் ஒரு ரீ குடிக்க.." மாமாவின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து வெளிவந்த அவள் தன் முகத்தை அலசிவிட்டு வந்தாள்...மாமியால் பரிமாறப்பட்ட தேனீரை சுவைத்தபடி இருந்தபோதும் மனதை ஆக்கிரமித்த அண்ணனின் தந்தையின் நினைவுகளை விலத்திக்கொள்ள முடியவில்லை .
மெல்ல அருகில் வந்து அமர்ந்த மாமி " மது இந்த வருசம் நீ தொப்பி எடுக்கணும் பிள்ளை.. என்ரை ராசாத்தி நல்லா படிச்சால்தான் சொந்தக்காலிலை நிற்கலாம் .. அம்மா அக்கா தங்கச்சி உன்னை நம்பித்தானே இருக்கினம் .. எல்லாத்தையும் யோசிச்சு நட புள்ளை.."
" ஓம் மாமி நிச்சயமாக" பதிலளித்துவிட்டு ரின்பால் சுவையுடனான தேனீரை சுவைத்தபடி மனதிற்குள் "" சங்கர் அந்த சிடுமூஞ்சி நல்லவனாக இருப்பானோ..என் அக்கறையிலைதான் சொன்னானோ... சீ இருக்காது.. எப்ப பார்த்தாலும் ஒரு மோடு மாதிரிதானே என்னை பார்க்கிறான்.. எந்தமொழியிலும் என்னாலை படிக்க ஏலும் என காட்டணும்..திமிர் பிடிச்சவன்...இவனுக்கு நான் நல்லாய் படிச்சு இந்த முறை தொப்பி எடுத்துக்காட்டணும்... " மனதிற்குள் சபதம் செய்து கொண்டாள்.
( தொடரும்)
குறிப்பு: உயர்தர பரீட்சை முடிவில் நல்லபெறுபேற்றுடன் சித்தி அடைந்தவர்களுக்கு தொப்பியும் போடப்படும்..பெற்றோர்கள் அந்த தொப்பியை அணிவிப்பர். ( HF , Gymnasium ( 3 வருட முடிவில் )அதன்பிறகு கலாசாலை (University )படிப்பு


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.