புதியவை

ஆதங்கத்தின் அரங்கம்-05 கவிஞர் தேவி பாலா அவர்களுடன்----ஆர் எஸ் கலா -மலேசியா

ஆதங்கத்தின் அரங்கம்-01

தற்போது எழுதி வரும் இளம் கவிஞர்களின் கவிதைகளை படிக்கும்
போது பல கருத்துக்கள் உங்கள் மனதில்உதிக்கலாம்  அது பற்றி கூற முடியுமா?
தேவிபாலா -
நானும் புதியவன்தானே கருத்து சொல்லும் அளவுக்கு அனுபவம் இன்னும் நான் பெறவில்லை

ஆனால் வாசிக்கும் போது மனதில் தோனுவது தனித்துவம் இல்லாமலே பலரும் எழுவது
கவிதை எழுதுவது ஒரு தவம் எழுதும் ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்த பொருள் வேண்டும்  
அது குறைவு எல்லோரும் அப்படி இல்லை வைரமுத்துவும் வாலியும் கூட யோசிக்காத
தளத்தில் எழுதும் பலர் இருக்கிறார்கள்
04 --ஆர் எஸ்கலா 
தாங்கள் பழய எழுத்தாளர் நீங்கள் முகநூல் திறந்த அக்காலத்துக்கும்
தற்போது தாங்கள் முகநூலில் நுழையும்போதும் தற்போது உள்ள நிலைப்பாட்டையும்
பார்க்கும் போது ஏற்ற இறக்கங்கள் எப்படிஇருக்கின்றது மாற்றங்களை கூறுங்கள்?
தேவிபாலா-
 நான்கு வருடமேஆகிறது முகநூல் வந்த போது அதில் கிடைத்த 
அத்தனை நன்பர்களும் முத்துக்களே போட்டி பொறாமை அப்போது இல்லை  
ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்து ஊக்கம் தந்து உயர செய்தனர்
இன்று அப்படி இல்லை போட்டி பொறாமை முதுகில் குத்தும் வஞ்சம் அதிகமாக
தோனுது யாருமே தன்முகத்துடன் இல்லை என்றே வருத்தம் வருகிறது
05 - --ஆர் எஸ்கலா 
தற்போது பெண் எழுத்தாளர்கள் பலர் எழுத்து துறையில் கால் பதித்து வருகின்றார்கள்

இவர்கள் பற்றி உங்கள் கருத்து?
தேவிபாலா -
எழுதுவதில் ஆன்பெண் பேதம் இல்லை கைகளை கட்டிக்கொண்டு கதவின் பின்
நின்ற பெண்கள் இன்று கணினி முன் அமர்ந்து உலகை உள்ளங்கையில் வைத்திருப்பது
ஆரோக்கியமான விசயம்
 வைரமுத்துவின் மனைவி பொன்மனியும் கவிஞர்தான்
ஆனால் வைரமுத்துவை தெரிந்த அளவு பொன்மணி அவர்களை பலருக்கு தெரியாது 
ஒருவேளை பெண் என்பதாலா என்று கூட தோன்னும் எப்படியே  
சமுகவலைத்தளங்கள் பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நல்ல தளம் 
06 - --ஆர் எஸ்கலா 
ஒரு நூல் வெளியீடு செய்தாலேஅவர்கள் கவிஞர் என்ற ஒரு பெருமிதம்
கொள்ளும் கவிஞர்கள் பற்றியும் இவர்களைதாக்கும் பிறர் பற்றியும் உங்கள் கருத்து? 
தேவிபாலா -
அது அவருவர் விருப்பம் நூல் வெளியீடுவது அவர்களை இன்னும் அதிக உந்துசக்தியோடு
பயணிக்க வைக்கும் ஆனால் நூல் வெளியீடுவது வாய்ப்பு கிடைத்தால் செய்வது இல்லை
என் எழுத்துக்கள் தரமானதா இது வாசிப்பவர் மனதில் இடம் பெறுமா என்று எழுதியவர்
யோசிச்சி செய்யனும் வாசகர் மனதில் சிறு சலனத்தை கூட ஏற்படுத்தாத எந்த படைப்பும்
எழுத்தாளனின் தோல்விதான் கவிஞனுக்கு மட்டும் பாராட்டும் பட்டங்களும் வாசகன் தருவது அதை
எழுதியவனே தனக்கு தானே சூடுவது கொஞ்சம் இயலாமை என்றே நினைக்கிறேன்
 07 - --ஆர் எஸ்கலா 
முகநூல் பல குரூப்புக்கள் கவிதை போட்டிநடாத்துகின்றதே அவர்கள் எல்லாம்
கவித்திறன் பெற்றவர்களா என்ற கேள்வியோடு ஒரு குற்றச்சாட்டும் பேசப்படுகின்றது
போட்டி என்னும் பெயரில் பொறாமையைவளர்த்து விடுவதாக இவை உங்கள்
பார்வையில் எப்படி?
தேவிபாலா
ஒருவகையில் சரிதான் ஒவ்வொருத்தருக்கும்தனிப்பட்ட ரசனை உண்டு என் ரசனை வேறு 
உங்கள் ரசனை வேறு என் ரசனைக்கு ஏற்ப எழுதப்படும் ஒன்றைதான் நான் ரசிப்பேன்
இங்கு நூறு பேர் கவிதை போட்டிக்கு அனுப்புகிறார்கள் ஒருவர் எப்படி இதுதான் சிறந்தது என்று தீர்மானிப்பது?
ஒரு தனி நபர் எடுக்கும் எந்த  முடிவும் சரியானதாக இருக்காது
அதை வாசகனிடமே விட்டு விடவேண்டும் இல்லை என்றால் தீர்ப்பு வேண்டிய
நபருக்கு சாதகமாக போக நிறைய வாய்ப்பு உண்டு இங்கு யாரும் மனுநீதீ சோழன் இல்லையே

08 - --ஆர் எஸ்கலா 
முகநூலில் நடாத்த படும் போட்டிக் கவிதைகளில் வெற்றி பெற்ற கவிஞர்கள்
கரங்களில் அதற்குரிய சாண்றிதழ் கொடுக்காதபட்சத்தில் அவை முழுமையான ஆரோக்கியமான
ஒரு போட்டியாக ஏற்றுக்கொள்ள இயலுமா உங்கள் பதிலை தெளிவாக சொல்லுங்கள் 


இவை பலரின் கேள்வி?
தேவிபாலா 
நிச்சயமாக இல்லை முகநூலில் இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்தால்
வேடிக்கையாக கோபமாக கூட வருகிறது நல்ல நட்புகளை கூட இதுபோன்ற
நிகழ்வுகள் கசப்புகளை உருவாக்கி விடுகிறது யாரோ சிலரின் பொழுதுப்போக்கு இது
நம்தான் ஒதுங்கி நல்லவைகளை தரம் பிறிக்கனும்.
09 - --ஆர் எஸ்கலா 
ஒரு சில ஆண்கள் பெண்களின் முன்னேற்றம் கண்டு அவதூறான
வார்த்தையால் விமர்சனம் செய்கின்றார்களேஅவர்களைப் பற்றி நீங்கள் நினைப்பது என்ன ?
தேவிபாலா
இது அவர்களின் இயலாமை என்றுதான் சொல்லனும் சுயமாக எதையும் சிந்திக்க
தெரியாதவர்களே இப்படிப்பட்ட அசிங்கமான செயலை செய்யத்துணிவார்
இப்படிஎதையாவது சொல்லி அழவைத்து அவளை எழுதவிடாது செய்யும் தந்திரம்
இயலாமை உள்ள இவர்களை கடந்து போவதே நல்லது
10 - --ஆர் எஸ்கலா 
முகநூலில் பலருடைய கவிதைகளைபடித்திருப்பிர்கள் கருத்திட்டு வாழ்த்தியும்இருபிர்கள்
அவர்களில் சிலரை குறிப்பிட்டுஅவர்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன ?
அவை எதனால் அவர்கள் கவிதை பிடிக்கும்எனக் கூறுங்கள்?
தேவிபாலா
ஐயோ இது கஸ்டமான கேள்வி நிறைய உண்டு யாரை சொல்வது
நீங்கள் கூடதான் பிடித்த கவிஞர்கண்ணில் படும் எதையும் கவிதையாக்கும்
உங்கள் திறமையும் ஆழுமையும் பிடிக்கும் நிறைய பேர் உண்டு ஒருவரை சொல்லி
ஒருவரை விட்டால் வருத்தமே மிஞ்சும்
11 --ஆர் எஸ்கலா 
தடாகம் நடாத்தும் மா பெரும் கவிதை போட்டி பற்றியும் அதன்
இலக்கிய சேவை பற்றியும் உங்கள்கருத்து என்ன?
தேவிபாலா
நல்ல கேள்வி நான் தடாகத்தின்  குழந்தை நான்கு வருடமாய் அதனுடன் வளர்கிறேன்
என் நன்பர்கள் பலரையும் அதில் இணையவைத்து எழுத வைத்த பெரும் மகிழ்ச்சியும் எனக்குண்டு
குறிப்பாக தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசேர்க்கும் மகத்தான தொண்டு செய்கிறது
தடாகம் ஏதோ ஒருதனி நபரின் விருப்படி இயங்கும் தளமல்ல தமிழ் அளுமை புலமைப்பெற்ற பலரின் சக்தி
வேண்டிய்வர் வேண்டாதவர் என்று  யாருக்காகவும் அணு அளவும் பிறழாது வளரும் எழுத்தாளர்களின்
தாய் வீடாய் இருக்கிறது அதான் தூய சேவை தொடரனும்
12--ஆர் எஸ்கலா 
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குஉங்கள் சார்வாக எவை கூற விரும்புகின்றீர்கள்?
தேவிபாலா
நிறைய எழுதுவதை விட நிறைவாக எழுதுங்கள் வலியோ சுகமோ எதையும் ஆழமாய் உணர்ந்து
உணர்த்துங்கள் அவ்வளவுதான்
13--ஆர் எஸ்கலா 
கவிஞர் என்னும் பெயரிலே ஐடிதிறந்து பெண் எழுத்தாளர்களை குறி
வைத்து அசிங்கமான புகைபடத்தையும்வார்த்தைகளையும் உவயோகிக்கும்
ஒரு சிலரை பற்றி உங்கள் விரிவானபதில் என்ன?
தேவிபாலா
உயிர் நேசமும் தமிழ் நேசமும் கொண்ட யாரும்இதை செய்ய மாட்டார்கள்
சதை நேசம் கொண்ட சிலர்தான் இப்படி அவர்களை கடந்து போங்கள்
தேங்கி நின்றால் எதுவுமே சாக்கடைதானே
14 ஆர் எஸ்கலா 
உங்கள் கவிதைகளை தொகுத்து தடாகதால் நூல் வெளியீடு செயயும்
சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்றுக் கொள் வீர்களா
மறுத்து விடுவீர்களா?
தேவிபாலா
நான் இன்னும்   வேண்டும் அந்த உயரத்தை தொட வேண்டும்
15--ஆர் எஸ்கலா 
வளரும் போது உதவியவர்களை வளர்ந்து விட்ட பின் நினையாதோர்
பற்றி உங்கள் பதில் என்ன?
தேவிபாலா 
என் நண்பர்களிலும் சிலர் அப்படி உண்டு வசந்த காலத்தில் வந்து தாங்கிச்செல்லும்
வேடந்தாங்கல் பறவை போல்தான் அவர்களும்  தன்னை தானே குருவாக
நினைப்பவன் ஒரு முட்டாளேயே குருவாக வைத்திருக்கிறான் என்ற வாசகமே
அவர்களுக்கு பொருந்தும் எவ்வளவு உயரத்தில் சென்றாலும் ஏணியை  மறக்கக்கூடாது இது
எனக்கும் பொருந்தும்

பல சிரமங்களுக்கு இடையினிலே நேரம்ஒதிக்கி  ஆதங்கத்தின் அரங்கம் மூலம்
நாங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும்பொறுமையோடு பதில் உரைத்த உங்களுக்கு
தடாகம்  மின் இதழ் ஆசிரியர் சார்வாகவும் என் சார்வாகவும் மீண்டும் கவித்துறைக்கு
விரைவில் வாருங்கள் என்னும் வேண்டுகோள் விடுத்து விடை பெறுகின்றேன் நன்றி நன்றி

ஆர் எஸ் கலா --மலேசியா 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.