புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2016 ல் நடத்திய (உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டியில் சிறந்த கவிதை யாக தெரிவு செய்யப்பட்டு "கவினெழி " பட்டமும் ,சான்றிதழும் பெறுகின்றார் கணேசு பரமநாதன் (வ-க-பரமநாதன்) Denmark


எரியும் மனசு

அறுசீர் விருத்தம்....

வெள்ளை வேட்டிக் காரரிவர்
….வெளியார்க் கிவரோ வீரரவர்
பள்ளி மனைகள் பலவுண்டாம
….பண்ணப் பணமாம் இவர்தொண்டாம்
கள்ளி வேலி யிவர்மனசு
….கனிவோ இவர்க்குக் கருவேம்பு
கொள்ளி வைக்கும் குணமுடையார்
….கொள்கை யெண்ணில் மனதெரியும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

தெரிந்தே கேடு செய்திடுவார்
….திட்ட மிட்டே முடித்திடுவார்
பெரிதாய்ப் பேசி மயக்கிடுவார்
….பெண்கள் என்றால் பல்லிழிப்பார்
தருவார் பொருட்கள் தரமின்றித்
….தலைவர் என்று தமையெண்ணி
எரியும் மனது இதுகண்டு
….எனினும் தனியாய் எதுசெய்வேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நாட்டில் இவரே நல்லவராம்
….நடிப்பே தினமும் இவர்பிழைப்பாம்
வீட்டில் காசு நகையென்று
….மெத்தக் குவித்து வைப்பாராம்
கேட்டுக் காசு வருவோர்க்குக்
….கிள்ளிக் கொடுத்துப் பறிப்பாராம்
ஈட்டில் காணி பறிபோகும்
….எண்ணில் மனதும் எரிந்திடுமாம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வண்ணம் கொண்ட மாளிகையில்
….மகிழ்ந்து விருந்து வைப்பாராம்
பண்ணிச் சேட்டை பலவங்கு
….பண்பைப் போட்டு மிதிப்பாராம்
உண்ண உணவு கேட்போரை
….உதைத்து விரட்டி யடிப்பராம்
எண்ணில் இவையைத் தினமிங்கு
….எரியும் மனது என்செய்வேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கணேசு பரமநாதன் (வ-க-பரமநாதன் Denmark

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.