புதியவை

ஒரு இஸ்லாமியப் பெண் , தனது 21 வது வயதில் ஒரு காதல் கலந்த புரட்சி நாவலை எழுதி இருக்கிறார்..


 பிரமிப்பாக இருக்கிறது..!
1917 இல் பிறந்த ஒரு இஸ்லாமியப் பெண் , தனது 21 வது வயதில் ஒரு காதல் கலந்த புரட்சி நாவலை எழுதி இருக்கிறார்..!
தமிழில் நாவல் எழுதிய அந்த முதல் முஸ்லிம் புரட்சிப் பெண்ணின் பெயர் சித்தி ஜூனைதா பேகம்...
சரி... அந்த கால கட்டத்தில் இலக்கிய உலகில் பெண்கள் நிலை எப்படி இருந்தது..?
அதை சித்தி ஜூனைதா பேகமே சொல்கிறார் :
“நான் புத்தகம் எழுதிய காலத்தில் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது, எந்தப் பெண்களிலும் நல்ல எழுத்தாளர்கள் அதிகம் இல்லை.. எழுத்தாளர் மட்டுமென்ன ? ஒரு முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கூடமும் இல்லை.
. இந்து - முஸ்லிம்கள் பெரிதும் ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே ஒரு முஸ்லிம் சிறுமியை நாகூரில் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு பெண் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்..”
இப்படிப்பட்ட காலத்தில் எழுத்துலகத்துக்கு வந்த சித்தி ஜூனைதா பேகம் , ஒரு இளம் விதவை..!
பன்னிரண்டு வயதில் கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டு , நான்கு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்து , பதினாறு வயதில் விதவை ஆனவராம்..!
“எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ , அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது..”
- இப்படி தனது 21 வது வயதில் , தான் எழுதிய ‘காதலா கடமையா..!’ நாவலில் சொல்லி இருக்கிறார் சித்தி ஜூனைதா பேகம்..!
இந்த “காதலா கடமையா” நாவலில் , சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் எல்லா இலக்கியங்களின் கருத்தும் வருகிறதாம்..!
ஆனால்... இந்த சித்தி ஜூனைதா பேகம் படிக்க அனுமதிக்கப்பட்டது ...
வெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே ..!
“காதலா கடமையா” நாவல் வெளிவந்த சில காலம் பின்....
அந்தக் கதையை அடிப்படையாக கொண்டு , ஒரு திரைப் படமும் தயாரிக்கப்பட்டு , அது மிகப் பெரிய வெற்றியை அடைந்ததாம்....!
அதுதான் எம்.ஜி.ஆர். நடித்த “நாடோடி மன்னன்” !
ஆனால் , அதற்கான பெயர் ஏனோ சித்தி ஜூனைதா பேகத்துக்கு கிடைக்கவில்லை..!
ஆனால் அதற்காக அவர் மனம் கலங்கவில்லை..!
அவர் நமக்கு சொன்ன செய்தி இதுதான் :
“பிறர் நலத்திற்காக வாழுங்கள். உங்கள் நலத்திற்காக மட்டும் வாழாதீர்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.