புதியவை

ஒரு கவிதை தடாகத்திற்கு -எஸ் டி சுந்தர்


" ஒற்றை பனைமரமே "

ஒற்றை பனைமரமே
ஓங்கியே நீ நிற்பதுமேன்
உனக்கென்று ஓர்துணையும்
உலகினில் தானிலையோ
பற்றில்லா ஞானியைப்போல்
பதற்றம் ஏதுமின்றி
சற்றும் தோய்வு இன்றி
எப்படி நீ வாழுகின்றாய்
உன்னை நினைக்கையிலே
உண்மையிலே நெஞ்சுருகும்
கண்ணை கலங்க வைக்கும்
கதைதான் உன்னதன்றோ
யாரோ விதைத்த விதை
தானாய் வளர்ந்ததென
பாரில் நீ உருவாய்
ஏதோ வளர்ந்துவிட்டாய்
கன்றாக நீ வளர்ந்தாய்
கவனிப்பார் யாருமின்றி
இன்றோ உன் உயிரை
மதுவாக்கி சுவைக்கின்றார்
பூப்பின் நிலையடைந்த
கன்னி என சூழ்ந்து
உன்னை சுவைத்தவரோ
இன்றோ உதறி விட்டார்
காய்ந்த சருகோலை
காற்றில் சரசரக்க
முற்றுபெறாத நீயோ
முகாரி பாடுகின்றாய்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.