புதியவை

காகிதத்தூண்--- மிர்ஷா -தீரன். ஆர்.எம் நௌஷாத்


கவிஞர் மிர்ஷா சாய்ந்தருதை சேர்ந்தவர். அதிகம் பிரபல்யம் விரும்பாத ஒருஅற்புதமான கவிஞர்.. கலைஞர். நண்பர்களின் வற்புறுத்தல்காரணமாக தனகவிதைகளை தொகுத்து ---காகிதத்தூண் -- என்ற கவிதை நூல் வெளியிட்டவர்.. இந்நூலுக்கு கலாநிதி எம்ஏநுஹ்மான் சேர் முன்னுரையும்..கலாபூஷணம் ஏபீர்முஹம்மது சேர் திறன்நோக்குஉரையும் வழங்கியிருந்தனர்.
இந்நூலை பற்றி நேத்ரா அலைவரிசையில் நாகபூஷணிஅவர்கள் ஒருநேர்காணல் செய்திருந்தார். அதில்கலந்துகொண்டுவிட்டு அடுத்தநாள் வீடுவந்து சேர்ந்த மிர்ஷா யாரும்எதிர்பாராதவாறு திடீரெனக் காலமானார். (2014) அந்த நேர்காணலைக்கூட அவர் நேரில்காணாமலே போய்விட்டார், அந்தவாரம் அது அவருக்கான அஞ்சலிசெய்தியுடன் ஒளிபரப்பானது
..
அதிர்ச்சி அளித்த அந்தக்கவிஞனின் ஈராண்டு நினைவில் அவரது இந்தக்கவிதை...
..
என்டஉம்மா
--------------------

நான் சாணக்குழந்தையாய் இருந்தபோது
எனது பீ மூத்திரம் அள்ளிக்கழுவி
இரண்டுவயதுவரை முலைப்பால்தந்து
என்னை வளர்த்த தாய்-இன்று
தரையில் விரித்த பாயில்படுத்துக்கொண்டு
அதிலேயே மலசலம்கழிக்கின்றாய்
உம்மா உன்னையும் உன்இடத்தையும்
கழுவித்துப்பரவு செய்து
உன்னைப்பராமரிக்க விடாமல்
என் மனம்அருவருப்படைகின்றது
முதலில்
அழுக்குப்படிந்த என்னை
துப்பரவுசெய்யவேண்டும்
ஆதலால் கீலம்கீலமாய்
கிழியக்கிழிய
என்இதயம்வெளியேறும்வரை
கற்பாறையில் வீசிவீசி அடிக்கின்றேன்
அடித்துக்கொண்டேஇருக்கின்றேன்
கருமேகம் மறைத்த நிலாவான மனது
கருமைவிலகித்தெளிவானது
தெளிவின் ஒளியில்
உம்மா புன்னகைத்தாள்
மனசு குளிர்ந்தது.....!
.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.