புதியவை

எரியும் மனசு -ரோஷான் ஏ.ஜிப்ரி



ஓதும் வேதம் ஊருக்காகும்
உண்மை இங்கே பேருக்காகும்
சாதும் கூட பொய்தான் பேசும்
சாத்தான் கூடம் ஆனது தேசம்
சூதும்,வாதும் நாளும் வளரும்
சூத்திரம் பார்த்தால் எரியுது மனசு
மோதும் வாழ்வாய் ஜீவிதம் தளரும்
மோட்சம் இன்றி எரியுது மனசு

பேசும் வார்த்தை காசாய் போச்சு
பேணுதல் இங்கே மாசாய் ஆச்சு
உறவுகள் என்பது பொய்யின் பூட்டு
உதவிகள் என்பது மெய்யின் சாட்டு
ஆனது மனித அடைவது பூச்சியம்
ஆயினும் மமதை ஆழ்வதோ ராஞ்சியம்
ஏனிந்த மானிடம் இப்படி ஆனதாய்
எண்ணிட மனமோ எரியுது தானதாய்

நல்லவர் போலே கூட இருப்பதும்
நம்பிய மனதில் நஞ்சு கலப்பதும்
உறவுகள் மேலே அன்பு விதைப்பதும்
உதவின்னு வந்தா ஏறி மிதிப்பதும்
எல்லா மொழியிலும் இது கதையாச்சு
பொல்லா வலிக்கு இப்பூமியே சாட்சி
எப்பவும் துயரதை தந்திடும் பொழுது
இப்பவும் நினைத்தால் எரியுது மனசு

ஆசையின் தீயில் பூக்களை தீய்ப்பது
ஆசீர் வதியென கடவுளை கேட்பதும்
மோசடி தானிங்கு வாடிக்கையாச்சு
மோகத்தில் வாழ்விங்கு வேடிக்கையாச்சு
காசைத்தான் சாமின்னு சரிசம மாக்குறான்
கணக்குகள் கேட்டுட்டா நரபலி கேக்குறான்
ஏனிந்த இழிநிலை ஏங்குது உசிரு
எண்ணிட தீயினில் கருகுது மனசு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.