புதியவை

வேட்(கை)டை திருகோணமலையிலிருந்து சிவரமணி

அன்று நடந்தது அறிந்து
இன்று நடக்கிறது  அறியவராது
என்னது  அநியாயம்…!

கொட்டமடித்த கூட்டம்
கொடிகட்டிப்பறக்கிது
கொள்கை கொண்ட வீரம்
கொதித்து நிற்குது..!

வேட்டை முடிந்ததா   இல்லை
வேட்கை தொடருது

பச்சைப்பசேல் புல்வெளிகள்
பாய்விரித்து சிரித்தது  அன்று
பாடி  ஆடி மகிழ்ந்தகூட்டம்
பாதை தேடி அலையுது இன்று

நித்தம் நித்தம் குண்டுச்சத்தம்
கேட்டபோதும் அச்சமில்லை
அச்சப்பட வைக்குதிந்த
அயல்நாட்டு வருகைகளும்
அயல்மொழிகளும் .!

வீடு போச்சு  நிலம் போச்சு
விளைந்த பயிர்போச்சு
சேர்த்துவைத்த சொத்தெல்லாம்
நிலைக்காது போச்சு

ஆசையாக ஆடை ஆபரணம் சேர்த்து
அழகுபார்த்து அனுபவிப்பதற்குள்
அத்தனையும் விட்டுவிட்டு
உயிர்காக்கும் நிலையாச்சு

எண்ணிப்பார்க்கிறது மனசு
எப்போது மீண்டும் வரும் அந்நாள்
அறியத்தான்  ஆவல்
இதுக்கு வேட்டையாட  வேண்டுமோ
இந்த  வேட்கைதான்  விடியுமோ  ??

திருகோணமலையிலிருந்து   சிவரமணி/

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.