புதியவை

ஆதங்கத்தின் அரங்கம் நேர்காணலில் இந்த வாரம் -கவித்தாரகை லதா -அவர்களுடன் கலா


 • தடாகம் இலைக்கிய வட்டம் மின் இதழில் ஆதங்கத்தின் அரங்கம் வழியே உங்களை சந்திக்க வருகின்றார்
  முகநூல் வழியே அறிமுகமாகி வார்டு கவுன்சிலராகவும் கவிஞராகவும் வலம் வரும் உங்கள் தோழி லதா அரசியல் பக்கம் கால் பதித்த லதா ஆதங்கத்தின் அரங்கம் பக்கத்திலே எம்மோடு இணைந்து கொள்கின்றார் ஞாயிற்றுக் கிழமை ஆதங்கத்தின் அரங்கம் பக்கத்தில் வெளியாகும் நேர்காணலை கண்டிப்பாகப்படித்து உறவுகள் கருத்திடுங்கள் உங்கள் ஊக்கமேஎன்றும் எங்கள் ஆக்கம
 • ஆர் எஸ் கலா
 • வணக்கம் ஆதங்கத்தின் வழி தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கவிதாயினி லதா அவர்களே தங்கள் பற்றியும் தங்களின் குடும்பம்பற்றியும் உங்கள் படிப்பு ஊர் இவைகளைப்பற்றியும் சுருக்கமாக அறிமுகம் செய்யுங்கள்
லதா: 

பிறந்தது 25.3.76 தஞ்சை மாவட்டம் பாபநாசம், சண்முகம்,விஜி தம்பதியர்க்கு நான்காவது மகள். பெயர் லதா. புனைபெயர் ராகினி. படிப்பு இன்னும் படிக்கணும் உலகத்தை பற்றி. மீனாட்சிசுந்தரத்தை நான் கைப்பிடித்து ஆண்டுகள் இருபது. அன்பான வாழ்க்கைக்கு அடையாளம் இரண்டு பவித்திரா , சக்தீஸ்வர் செல்லங்களாய், அரசியல்,ஆன்மீகம்,பொதுசேவை,இலக்கியம் என்று என் கால சக்கரம் சூழல்கிறது,நட்பென்ற கரம் கோர்த்து

ஆர் எஸ் கலா
தாங்கள் ஒரு இல்லத்தரசி என்றுகூறியுள்ளீர்கள் குடும்பத்தையும்
கவணித்துக் கொண்டு இலக்கியபயணத்திலும் பயணிப்பது எப்படி உள்ளது?
இரண்டுமே மிகப் பொறுப்புடையவைகள் அது பற்றி கூறுங்கள் ?
லதா

நான் என்றுமே இரண்டையும் ஒப்பிட்டு குழப்பி கொள்வது இல்லை
குடும்ப நிகழ்வுகளில்தான் கவிதை பிறக்கிறது. எனக்கு துன்பம் இல்லை. இன்பமே என்றும்

ஆர் எஸ் கலா
உங்கள் கணவர் பற்றியும் உங்கள் இலக்கிய பயணத்துக்கு அவர்களின்சப்போட்டிங் பற்றியும் கூறுங்கள் ?
லதா
ஆணின் வெற்றிக்குப்பின் பெண் என்பர், ஆனால் என் ஒவ்வொரு வெற்றிக்கு என் கணவர்தான் இருக்கிறார்.தவறுகளை மன்னிப்பதில், பாசம் காட்டுவதில், ஊக்கப்படுத்துவதில் இவர் ஒரு சிறந்த ஆசான், என் தாயுமானவர் இவர். தன்னை தாழ்த்திக்கொள்ளாமல் என்னை பாராட்டும் ரசிகன் இவர். மிகவும் நான் நேசிக்கிறேன் மீனு செல்லம்
ஆர் எஸ் கலா
பொதுவாக. முகநூல் கையால கணவன்மார் மனைவிக்கு தடை விதிப்பார்கள் உங்கள் கணவர் இப்படி ஏதேனும் கட்டுப்பாடு வைத்தது உண்டா? எப்படி நீங்கள் புரிய வைத்தீர்கள் இன்று வரை முகநூலில் எழுதி வருகின்றீர்களே?

லதா
 • என்னவர் முகநூலுக்கு தடைப்போட்டது இல்லை. தொலைப்பேசியிலே நான் தொலைந்து போவதால் கோபப்படுவார். இப்போது என் ஆர்வம் கண்டு எதும் சொல்வது இல்லை. தொலைப்பேசி என் வாழ்வின் மிகப்பெரிய அங்கம் என்பதை அறிந்தார். நான் முகநூல் கவிஞர்களுக்கு சிறந்த களமாக கருதிகிறேன்.
 • ஆர் எஸ் கலா
 • எழுத்து துறையில் புதிதாக வந்துள்ள எழுத்தாளர்களுக்கும்எழுதிக்கொண்டு இருப்போருக்கும்உங்கள் ஆலோசனை என்ன எதை கூற ஆசைப்படுகின்றீர்கள் ?
 • லதா
 • எழுத்தாளர்கள் புதுக்கவிதை என்ற பெயரில் பெண்களை கருவாக கொண்டு அப்பட்டமாக காமம் கலந்து அவள் நடை,உடை,இடை,தொடை, தொடாது கவிதை எழுதலாம். நமக்காக கருக்கள் குவிந்துக்கிடக்கின்றன. கவிதை எழுத.
 • ஆர் எஸ் கலா
 • சாதாரணமாக முகநூலில் எழுத ஆரம்பித்து இரு நூல் வெளியீடு செய்யும் அளவு வளர்ந்து உள்ளீர்கள் நீங்கள் இந்த இடத்தைப் பிடிக்கஉங்களுக்கு ஊக்கம் கொடுத்து உறுதுணையாக இருந்தவர்கள் யாராவது உண்டா?
 • லதா
 • எனது கணவர், நண்பர்கள், கவிஞர்கள்,என் கவிதையின் ரசிகர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்துஉறுதுணையாக இருந்தவர்கள்
 • ஆர் எஸ் கலா👭
 • இந்த இரு நூல் தொகுப்பின் வெளியீட்டின்போதும் என்ன. ?வேறு பாடு உணர்ந்தீர்கள் எந்த நூல் தொகுப்புக்கு வரவேற்பு அதிகம்கிடைத்தது?
 • லதா
 • ஞாபகக்குமிழ்கள் என்ற நூல் மட்டுமே கடந்த வருடம் வெளியிட்டேன். அடுத்த நூல் இந்த வருட இறுதியில் வெளிவரும். மக்கள் மத்தியில் புத்தகம் வாங்கிப்படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது எனலாம். கணிப்பொறி இதற்கு காரணம்.
 • ஆர் எஸ் கலா
 • இரு நூல்களையும் வெளியீடு செய்யும்போது நீங்கள் தனித்து செய்தீர்களா இல்லை ஏதேனும் அமைப்பின் ஊடாக அவர்கள்உதவியோடு செய்தீர்களா?
 • லதா: 
 • தனிப்பட்ட முறையில் புத்தகம் உருவாக்கி மனிதநேயப் பேரவை மூலமாக வெளியிட்டேன். திருக்குவளையில் நூலக வாசகர் வட்டம் சார்பிலும்,முத்தமிழ் மன்றம் சார்பிலும் ஞாபகக்குமிழின் அறிமுக விழா நடந்தது
 • ஆர் எஸ் கலா 
 • தற்போது பல முகநூல் குரூப்புக்கள்கவிதைப் போட்டிகள் நடாத்துகின்றதேஏன்?
 • கலந்து கொள்வதில்லை அந்தபோட்டிகள் பற்றி உங்கள் கருத்து எவை?
 • லதா 
 • ஆரம்ப காலத்தில் கலந்து கொண்டேன், தற்சமயம் நேரம் போதாமை காரணம். சில இடங்களில் கவிதையை விட நட்புக்கு முன்னுரிமை வழங்குவதாக கருதுகிறேன்.
 • ஆர் எஸ் கலா
 • தடாகம் இலக்கியம் வட்டம் பற்றிஉங்கள் அவிப்பிராயம் எவை?
 • லதா
 • தடாகம் சிறந்த கவிதைத் தளம். பல கலை உள்ளங்களை உயர்த்தி விட்டு தலை நிமிர்ந்து பார்க்கும்தளம் நிறைய விருதினை கவிஞர்களுக்கு அளித்துள்ளது விருது பெற்றவர்கள் கூட போட்டி நடத்தும் நிலைக்கு இன்று முன்னேறி விட்டார்கள் தடாகத்துக்கு நிகர் தாடாகம் தான் .மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
 • ஆர் எஸ் கலா👭
 • நீங்கள் தற்போது அரசியலிலும் பாதம் பதித்துள்ளதாக அறிந்தேன்வாழ்த்துக்கள் அப்படி என்றால்தங்களின் பதவி எவை? என்ன பொறுப்பில்இருக்கின்றீர்கள்?
 • லதா:
 • ஆம் அரசியலில் வார்டு கவுன்சிலராக இருக்கிறேன்.
 • ஆர் எஸ் கலா
 • இந்த சாதி மத சண்டை அதிகரிக்கின்றதேஇப்படிப் பட்ட செய்திகளை படிக்கும் போது உங்கள் மனதில் எழும் ஆதங்கத்தைஎங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்?
 • லதா
 • :சாதி ,மத, பூசல் என்று ஒழியும் என்று நினைக்கிறேன். காலசக்கரம் ஒடும் வேகத்தில் சாதிக்க நிறைய இருக்க சாதி எதற்கு.

 • ஆர் எஸ் கலா
 • ஒரு பெண்ணின் முன்னேற்றம்பொறுக்க முடியாத சில ஆண்கள் பல வகையிலும் அவர்களுக்கு மனஉளைச்சல் கொடுப்பது உண்டு அந்த நிலை தங்களுக்கு ஏற் பட்டதாஅதை எப்படி முறியடித்து வெற்றிநடை போடுகின்றீர்கள்?
 • பல பெண்களின்புலம்பல் இவை அவர்களுக்கு உங்கள்தைரிய வார்த்தை எவை? லதா:
 • கண்டிப்பாக பெண் என்பவள் ஏதோ அடிமையாக சாசனம் எழுதிக்கொடுத்துட்டதா நினைக்குறாங்க. பலமடங்கு வாழ்கையில் முன்னேறும் பெண்ணை அவள் ஒழுங்கீனம்,கற்பை குறைக்கூறி, இருட்டறையில் தள்ளிவிட்டு கைதட்டி ரசிக்கிறார்கள் சில ஆண் மகன்கள். பெண்ணே கற்பு என்பது உன் உடலில் ஒட்டியுள்ள சதை அல்ல, மனம் அதில் நாம் உயர்ந்தவர்கள். துவண்டுப்போகாது, துணிந்து நில்லுங்கள். புறமுதுகு காட்டி போரில் ஒடிய மகனுக்கு பால் கொடுத்த தன் கொக்கைகளை வாள் கொண்டு அறுத்து எறிந்த மண்ணில் வாழ்கிறோம். பெண்ணே துன்பம் என்றால் ரெளத்திரம் பழகு.
 • ஆர் எஸ் கலா 
 • பொறாமை கவிஞர்களையும் விட்டுவைக்க வில்லை அவர்கள் மனதிலும்
 • நிறைந்து விட்டது என்றால் இதற்குஉங்கள் பதில் எவை?
 • லதா
 • ஆம், நிறைய கவிஞர்கள் மனம்விட்டு பாராட்டுவதும், வாழ்த்துவதும் இல்லை. தான் எழுதுவது மட்டுமே சிறந்த கவிதையாக நினைக்கிறார்கள்.ஒரு தரமான நல்ல கவிஞரின் உள்ளத்தில் பொறாமைஇருக்காது காரணம் மற்றவர்களும் வளர் வேண்டும் என்றே நினைப்பான்
 • ஆர் எஸ் கலா
 • ஒரு சில மூத்த கவிஞர்கள் வளர்ந்துவரும் கவிஞர்களை தட்டிக் கொடுத்து வளர்க்காமல் தட்டி கழித்து விலக்கிவைக்கின்றார்களே அவர்கள் பற்றிஉங்கள் கருத்து? லதா: 
 • சிறந்த ஒடுகளம் இது . இதில் அவர் ஒதுங்க வேண்டும் என்று நினைப்பது தவறு. மூத்த கவிஞரை வீழ்த்தி வெற்றிவாகை சூடினால் நமக்கு பெருமிதம் தானே...
 • ஆர் எஸ் கலா 
 • பல தரப்பட்ட பெரும் கவிஞர்களும்தாங்கள் எத்தனையோ விருதுகள் பெற்று இருந்தும் புதியவர்களோடு முட்டி மோதி போட்டிகளில் பங்கு பெறுகின்றார்களே சிறியோருக்குவழி விடாமல் என்று என்னிடமே பலர் ஆதங்கப் பட்டனர் இவை பற்றிஏதேனும் கூற விரும்புகின்றீர்களா?
 • லதா:
 • பொதுச்சேவை குணம் எனக்கு இருந்த காரணத்தால் கவிதை எழுத தோன்றியது, மனதை பாதித்த விசயம் கவிதையாக வெளிப்படும். அரசியல் ,கவிதை என்றால் நிச்சயம் கவிதைக்கு முதலிடம் கொடுப்பேன்.
 • ஆர் எஸ் கலா
 • நீங்கள் தற்போது இலக்கியத்துறையில்மட்டும் இல்லை பொறுப்பான பொதுச்சேவையிலும் ஈடு பட்டுள்ளீர்கள் இவை இரண்டில் எத்துறையில் சாதிக்க ஆசைப்படுகின்றீர்கள்?
 • லதா
 • நிறைய கவிஞர்கள் தாமரை அவர்கள் வரிகள் என் மனதை உலுக்கி உள்ளது, முகநூலில் பெயர் சொன்னால் பக்கம் போதாது. சிறந்த கவிதைக்கு நான் என்றும் ரசிகைதான்
 • ஆர் எஸ் கலா
 • முகநூலில் ஒரு சிலரின் கவிதைகளைபடிக்கும் போது ஐயோ நம்மால் இது போன்று எழுத முடியலயே என்று எண்ணத்தோன்றும்அப்படி யார் பதிவு உங்கள்மனம் தொட்டவை?
 • லதா
 • மாத பத்திரிக்கை மற்றும் மின்னிதழ் வானொலி மூலமாக என் கவிதைகளை வெளியீடு செய்கிறேன்
 • ஆர் எஸ் கலா
 • உங்கள் கவிதைகள் வேறு எந்தவழியில் வெளியீடு செய்கின்றீர்கள்
 • பத்திரைகை வானொலி தொலைக்காட்சிஇப்படி ஏதாவது உண்டா?
 • லதா: 
 • பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் ஆண்களுக்கு வந்தனம்.எவ்வளவு இடர்பாடு வந்தாலும் நட்பு என்றால் அவர்களை விட்டு விலகாது நட்பின் தூய்மை உணர்த்துங்கள் புறம்பேசுபவர்களுக்கு
 • ஆர் எஸ் கலா
 • தொடர்ந்து எழுதி வரும் பெண்களுக்கும்அவர்களை ஊக்கம் கொடுக்கும் சில ஆண் நட்புக்களுக்கும் என்ன கூற ஆசைப்படுகின்றீர்கள்?
 • லதா
 • முகநூல் தோழர்களால் கவிக்குயில், மனிதநேயப்பேரவையால் கவித்தாரகை , முத்தமிழ்மன்றம் கவித்தாயினி விருது வழங்கி கௌரவித்தார்கள்
 • ஆர் எஸ் கலா
 • இறுதியாக நீங்கள் இதுவைரைஎழுத்து துறையில் பெற்ற விருது பட்டங்கள் இவைகளைப் பற்றி கூறுவைதோடுபொதுவாக பெண்களுக்கு என்ன அறிவுரை கூற ஆசைப்படுகின்றீர்கள் ?
 • லதா: 
 • எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு என்று போராடும் நாம். நம் பாதுகாப்பு குறித்து கவலைக்கொள்வது இல்லை. எத்துறையில் முன்னேறும் பெண்ணும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறாள், உலகில் சிலநாடுகளில் பெண் பிறப்பு உறுப்பை சிதைப்பதும் ,மார்பகத்தை தட்டையாக்குவதும் நடக்கிறது. சுதந்திரம் நாம் அடையவில்லை. பெண்ணே! முடங்கி கிடக்கிறோம், முடக்கப்படுகிறோம். இனவெறி பிடித்த சமுதாயத்திற்கு பெண்ணினம் போராட வேண்டும். பூ வாக இருந்தாலும் புயலாக இரு 
 • ஆர் எஸ் கலா
 •  ல பொறுப்பு சிரமங்களுக்கு மத்தியில்நேரம் ஒதிக்கி எங்கள் ஆதங்கத்தின் அரங்கம்
  வழியே உங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டியமைக்குதடாக மின் இதழ் ஆசிரியர் சார்வாகவும் என்னுடையசார்வாகவும் நன்றிகள் இலக்கியத்திலும்அரசியலிலும் பேரும் புகழோடும் வாழ எங்களின்
 • இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
  நன்றி சகோதரி கவிதாயினி லதா

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.