புதியவை

சொந்த மண்ணின் கண்ணீர் துடைக்கும் ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)- அனஸ் அப்பாஸ் -


IMG_0730சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் வழங்கும் தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த (பெப் 13) காலை 10.00 மணியலவில் பொலன்னறுவை வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்த திட்டம் சிறுநீர் நோயை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டத்தின் கீழ் நாட்டில் ஜந்து மாவட்டங்களில் 39 பிரதேசங்களில் 7 பில்லியன் ரூபாய் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மாகண சபைகள்  மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ”புரணகும” வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.
IMG_0880ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராச்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு நகர அபிவிருத்தி நீர்வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சினி பெர்ணாந்தோ பிள்ளே, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்தின, வடமத்திய மாகாணசபை முதலமைச்சர் பேஷல ஜயரத்தன, பெலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலன ஆகியோர் கலந்து கொண்டனர்.
IMG_0899பொலன்னறுவை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இவ்வருட இறுதிக்குள் அம்மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வே இதுவாகும்.
 
இந்நிகழ்வினை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
 
இலங்கை  வரலாற்றில் முதல்முறையாக இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களும் பங்குபற்றிய அபிவிருத்தி அடிக்கல் நடு வைபவம் இதுவே முதல் தடவையாகும்.
 
இனங்காணப்பட்ட பிரச்சினைகள் என்ன, ஜனாதிபதி உரை என்பவற்றை பார்க்க :: https://youtu.be/UQhhiGFx0Pg

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.