புதியவை

பெண்மையைப் போற்றுவோம் !ஓசூர் மு.மணிமேகலைபாசமுள்ள அம்மாவாய்
நேசமிக்க சகோதரியாய்
அரவணைக்கும் மனைவியாய் 


அருமை மகளாய்
உற்ற தோழியாய்
பற்றுள்ள பாட்டியாய் 

அன்பான அத்தையாய் 

பரிவான சித்தியாய்
ஒவ்வொரு நிலையிலும்
வாழ்கிறாள் பெண்மையாய் !

பெண்ணுக்கு விடுதலை யில்லையென்றால்
பின்னிந்த உலகில் வாழ்க்கையில்லை
பாரதியின் புதுமைப் பெண்டிர் 

பார் முழுதும் தோன்றிட
வீரத் திலகமிட்டு வெற்றிநடை போட்டிட
பெண்மையைக் கொண்டாட
பெண்ணினத்தைப் பண்பாட
வந்ததொரு நல்வாய்ப்பு !

வாழ்த்துங்கள் வாயார!
போற்றுங்கள் மனமார!
எத்துறையிலும் சாதிப்போ மென்ற
ஏற்றமுடன் பெண்ணினம் !

நுகத்தடியை எறிந்துவிட்டு
சகத்தினில் இன்னும் சாதிக்க
மறந்துவிட்ட சிறகுகளை விரித்து
புறப்பட்டு விட்டாள் புயலாக !

புகழவேண்டாம் பூ வென்று கூறி
நிறுத்திவிடாதீர் தென்றலென்று கூறி
விருட்சம் தாங்கும் வேரவள்!
பெண்களைப் போற்றும் சமுதாயம்
தோற்றதாய் வரலாறு இல்லை! 

எங்களைப் போற்றும் அன்புள்ளங்களே
வென்றிடுவோம் நாம் இணைந்து !


மு.மணிமேகலை ஓசூர்


அண்மையில் இலங்கையில் நடைபெற்ற விழாவில் 
பெறுமதி மிக்க அன்பளிப்பு செய்து 
தடாகத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களை 
கவிதையாயினி  ஓசூர் மு.மணிமேகலை கௌரவித்தார் 
அவருக்கு தடாகத்தினரின் நிறைவான நன்றி 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.