புதியவை

கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் காலமானார்! - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் காலமானார்! - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

இலங்கையின் பிரபல எழுத்தாளரும் கல்வியாளருமான கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் 
எனது நானா   (10.03.2016 வியாழக்கிழமை)அன்று காலை கண்டியில் காலமானார்.
கடந்த ஆண்டிறுதியில் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் யாத்திரையை, துணைவியார் மஸீதா புன்னியாமீனுடன் மேற்கொண்டிருந்தார் 
 இவர், புனிதக்கடமையை தனது மச்சான் அல் ஹாஜ் எம் ஆர் எம் ரிஸ்வியின்  இருமுறை சிறப்பாக நிறைவுசெய்தபின்
தாயிப் நகர் செல்லும்  வேளையில்சுகவீனம்ஏற்பாட்டு மதீனாவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்  
 29.12.2015 அன்று  இலங்கைக்கு கொண்டு  வரும் போது மீண்டும் சுகவீனம் காரணமாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு துபாய் ராஷீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் 
 ஒரு மாத தீவிர சிகிச்சைகளின் பின்னர் 29.1.2016 அன்று இலங்கை திரும்பிய அவர், 
மேலதிக வைத்தியத்துக்காக மீண்டும் 2.2.2016 அன்று பல்லேகல ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஓரளவு சுகம் பெற்று நடக்க முயன்றபோது வீட்டுக்கு வந்தார்  சந்தோசமாகவே  இருந்தார்  காலில் சிறு கீறல் கதிரையில் அமர்ந்து செல்லும் போது ஏற்பட்டது பின்பு மறுநாள் கால் சிவப்பாக மாறி கைவைக்க முடியாதவாறு மாறிவிட்டது கூடவே பாங்கர காச்சலும்ஏற்பட்டது உடனே வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்தோம்  அங்கே வைத்திய பயனின்றி தனது 55வது வயதில் மார்ச் 10-2016 அன்று காலையில் கண்டியில் காலமானார் 
இரவு 8-30மணியளவில் நான் அங்கு சென்ற பின்பு தான் ஜனாஸா நல்லடக்கம்செய்யப்பட்டது  
நீரிழிவு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த பன்னியாமீன்,நானா 
அதன் தீவிர பாதிப்பினால்எம்மை விட்டுப் பிரிந்தமைஎங்கள்  குடும்பத்தினரை  கடும் துயரில் ஆழ்த்தியுள்ளது
 இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள உடதலவின்ன எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பீர் முகம்மது புன்னியாமீன்.
(11  11, 1960 - யில் பிறந்தார்  தகப்பன் பீர் முஹம்மத் இலங்கை பொலிஸ் திணைக்களம் 
 தாயார் சைதா உம்மா பீர் மொஹம்மட்
 கண்டி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, கண்டி மடவளை மதீனா தேசியக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினைப் பெற்றார் 
மாணவப் பருவத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 சூலை 2ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து 162 சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதினார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில்கலைமகள், தீபம், தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும், ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின.
தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார்.
வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டு முழுநேர ஊடகவியலாளராகவும், தமிழ் இலக்கிய ஆய்வாளராகவும் செயலாற்றினார். 170 நூல்களை தமிழ்மொழி மூலம் எழுதி வெளியிட்டார்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு’ எனும் தலைப்பில் இவரது 15 தொகுதிகளிலும் இலங்கையைச் சேர்ந்த 350 ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரங்களும், புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த 44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களும் பதிவாக்கப்பட்டது.
இவரால் எழுதப்பட்ட முதல் 110 நூல்களும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ந. செல்வராஜாவினால் தொகுத்து வெளியிடப்பட்டுவரும் ஈழத்துத் தமிழ் நூல்களின் பன்னாட்டு ஆவணக் களஞ்சியமான நூல் தேட்டத்தில் பதிவாக்கப்பட்டுள்ளன.
இவரின் 340க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், அறிவியல், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக பன்னாட்டு நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவர் எழுதினார்.
1987 நவம்பர் 11 இல் இவரால் உருவாக்கப்பட்ட வெளியீட்டு அமைப்பான “சிந்தனைவட்டம்” மூலம் 1988 முதல் 2010 நவம்பர் 11 வரை 330 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதில் 100வது வெளியீடு இரட்டை தாயின் ஒற்றைக் குழந்தை
மனைவி  மஸீதாபுன்னியாமீன் ,தங்கை கலைமகள் ஹிதாயா ரிஸ்வி இருவருன் இணைந்து வெளியிட்டதுஇதன் விழா கப்ன்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது   
சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் மூலமாக நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் புகழ்பெற்று விளங்கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும் இனங்கண்டு விருது வழங்கி கௌரவித்து வந்தார்.

புன்னியாமீன் 1979ஆம் ஆண்டு ‘விடிவு’ எனும் இலக்கிய சஞ்சிகையையும், 1980களில் ‘அல்ஹிலால்’ எனும் பத்திரிகையையும் ஆசிரியராகவிருந்து நடத்தியவர்
இலங்கையில் தேசிய பத்திரிகைகள் பலவற்றில் நிருபராக பணியாற்றினார்
ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’, ‘லண்டன் குரல்’ ஆகிய பத்திரிகைகளிலும், ‘தேசம்’ சஞ்சிகையினதும், ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றினதும் இலங்கைச் செய்தியாளராகப் பணியாற்றினார்.
இவரது பல இலக்கியப் பேட்டிகள் இலங்கையில் ‘ஐ’ தொலைக்காட்சி, பிரித்தானியாவில் ‘தீபம்’ தொலைக்காட்சி, பிரித்தானியாவின்பன்னாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‘(ஐ.பி.சி.) வானொலி’
,இலண்டன் தமிழ் வானொலி’, ஜெர்மனியில் ‘ஐரோப்பியத் தமிழ் வானொலி’, Swiss Government FM Radio "Jeevan for U" தமிழ் வானொலி’ ஆகியவற்றில் நேரடி ஒளி / ஒலிபரப்பாக இடம்பெற்றன.

இவரது பன்முகத்தன்மைகொண்ட இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டுகிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர்- டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தைமுகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது.
 இலங்கையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான மல்லிகை 2005 மார்ச்சு இதழிலும், மற்றொரு இலக்கிய சஞ்சிகையான ஞானம் சஞ்சிகை தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தன. கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும், கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘செங்கதிர்’ இலக்கிய சஞ்சிகையின் [2009]ஆகஸ்ட் இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கி வெளிவந்தன
.தடாகம் அகஸ்தியார் விருது 
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 1995 – விசேட கௌரவ விருது
ரெபாஹ் இஸ்லாமிய சேமநல அமைப்பு 1997 – இலக்கிய செம்மல் விருது
கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 1998 – விசேட விருது
மலையக கலை கலாசார சங்கம் 1999 – ரத்னதீப விருது
மலையக கலை கலாசார சங்கம் 2000 – விசேட ரத்னதீப விருது
இலங்கை அரசு 2003 – கலாபூசணம் விருது
ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் (டியுஸ்பேக்) 2007 – விசேட விருது
சுடர் ஒளி "கல்விச் சுடர" – கௌரவ விருது 2009
ஆகியவற்றை பெற்றுள்ளார் 
ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், நூல்வெளியீட்டாளராகவும், ஊடகவியலாளராகவும் பல்வேறு பரிமாணங்களிலும் அறியப்பெற்றவர  பீர்முகம்மது புன்னியாமீன்
“சிந்தனை வட்டம்” என்ற அறிவுசார் நிறுவனத்தின் மூலம் பல நூல்களை எழுதியும் பலரது நூல்களை வெளியிட்டும், புலமைப்பரிசில் பரீட்சை சார்ந்த பல கல்விப் பணிகளையாற்றியும் சிறப்புற்ற அவர்
 உடத்தலவின்ன என்ற சிற்றூரின் பெயரை உலகளாவியரீதியில் பலரையும் உச்சரிக்க வைத்ததுடன் ஈழத்து இலக்கியத் தோட்டத்திற்கு மெளனமாகப் பொழிந்த மாமழையாக நின்று பணியாற்றியவர்.
  (ஜுலை19, 2014) யில் திருமணபந்தத்தில் இணைந்து 
32 வருடங்கள் வாழ்ந்து விட்டு இறையடி சென்று விட்டார் 
2004 முதல் 2009 வரை இவர் இலங்கை முஸ்லிம் எழத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்தொகுப்பொன்றை கட்டுரைகளாக எழுதித் தொகுத்து 15 தொகுதிகளில் அவற்றை வெளியிட்டுவைத்திருக்கிறார். 
பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பட்டதாரியான இவர், 162 சிறுகதைகளையும் 5000க்கும் மேற்பட்ட சமூக, அறிவியல், இலக்கியப் படைப்புகளையும் தமிழ் உலகுக்குப் புயலென வழங்கியவர். 2010இல் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்புக்கற்கைநெறி மாணவி எம்.ஐ.எப்.நபிலா என்பவர் இவரது சிறுகதைகளைத் தன் பட்டத் தேர்வுக்காக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். புன்னியாமீனின் நூல்களில் பெரும்பான்மையானவை “நுலகம்” இணையத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் அவரது படைப்புகள் அனைத்தையும் பற்றிய ஆவணங்களான “நூல்தேட்டத்தில் பீ.எம்.புன்னியாமீன்”, “நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம்” ஆகிய இரு நூல்கள் சிந்தனை வட்ட வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.
இணையத் தளத்தின் பாவனையைப் பிற்காலத்தில் தமிழ் மக்களிடையே அறிமுகப்படுத்துவதில் தீவிர பங்காற்றிய இவர் விக்கிபீடியாவில் மாத்திரம் 7000 பதிவுகளுக்கு மேல் எழுதித் தரவேற்றம் செய்தவர். இறுதிக்காலம் வரை தனக்கெனவொரு முகநூல் வட்டத்தைக் கொண்டியங்கியவர். அவரது இறுதிக்காலத்தில் இம்முகநூல் வழியாகவே அவரது இறுதிக்காலத்து வைத்தியசாலைச் செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் என்பன வெளியாகி உலகின் மூலை முடுக்குகளெல்லாம் நண்பர் புன்னியாமீனின் உடல்நிலை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும் வழியமைந்தது.
இல்லற வாழ்வில் அவருடன் இணைந்த அவரது துணைவியார் தனது கணவரின் இறுதிக்காலத்தில், அதீத ஆழுமையுடன் செயற்பட்டு துபாயிலிருந்து ஒரு மாதகாலம் தனித்துப் போராடி, தன் கணவர் ஓரளவு குணமான நிலையில் தாயகத்துக்கு அவரைக் கொண்டுவந்து சேர்த்து, அன்புக் கணவரின் இறுதிக் காலம்வரை மன உறுதியுடன் செயற்பட்டு   எமது மனங்களில் அழியா இடம்பெற்றுக்கொண்டவர்.
மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல. புன்னியாமீன்நானா  மரணத்தின் பின்பும் எம்மிடையே வாழ்வார்.
 அவர் விட்டுச்சென்றுள்ள நூல்களே அவரை எம்முடன் இணைத்துவைக்கும்.
அவரது பிரிவில் கலங்கி நிற்கும் என் மஸீ மைனி  மகன் சஜீர் அஹமட்  மகள் சம்ஹா  குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
என் நானாவுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வரமாக்கிக் கொடுப்பானாக ஆமீன் 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.