புதியவை

எரியும் மனசு- வில்லூரான்


பெற்றவரைப் பெரும் கொடுமை செய்வார்
. .பெரும் பாரம் என்றவரை புகழிடம் விடுவார்
கற்றவரும் நற்கருமங்கள் ஆற்றாது
. .கட்டுக் கட்டாய் கையூட்டு தான் பெறுவார்
போற்றவரும் ஆலயத்திற் பொதுமை இல்லை
. .பொருள் கொண்டார் தானங்கும் அருள் பெறுவார்

வெற்றிகளும் விருதுகளும் பின் வழியால்
. .பெற்றிடுவர் தமைக்கான பற்றியெரியுதென் மனசு
தாய் மகள் பேதம் தெரியாது வன்புனரும்
. . தரங்கெட்ட மானிடப் பிறவி தான் கண்டும்
தூய்தான மறை வளர்ப்போர் மறைவாகத்
. .துகிலுரியும் துன்ப நிலை தான் கண்டும்

பேயாகிப் பெசன் என்று பெரும் வீதிதனில்
. .பெண்ணென்று அலைவாரின் பித்தம் கண்டும்
வயோதிபத்தை இழிவாக்கி வதை செய்து
. .வாழ்வார் கண்டும் வாய் வயிறு பற்றி எரிகிறது
பள்ளி வரும் பாலகரைப் பாதையிலே மோதிப்
. .பறக்கின்ற பேருந்து சாரதியின் சாதனை கண்டும்

தள்ளிநின்று தானுதவி செய்யாது தவிக்கவிட்டு
. .தான் விலகித் போவார் தமைக் கண்டும்
உள்ளிருக்கும் ஆண்டவனின் உறையுள் நாடி
. .உடுத்து வரும் உடுதுணிகள் கோலம் கண்டும்
பல்லதனைக் கடித்திந்தப் பாரிழிவு பார்க்கையிலே
. .பஞ்சதாகப் பற்றியெரி தென் மனசு

மத உரிகள் போர்த்திந்த மா நிலத்தே
. . மத வெறியால் மனிதம் மடியக் கண்டும்
சீதையர்தம் வாழ்வதனைச் சீதனத்தாற் சீரழித்தே
. .சிறை வைத்து சிறுமைதான் செய்வார் கண்டும்
பாதையிலும் காதலென்று பண்பாட்டை இழந்து
. .பாவையரும் ஆடவரும் படுகின்ற பாடுகண்டும்

போதையிலே பாதகம் படுகொலை புரிவார் கண்டும்
. .வேதனையால் வீறிட்டு எரியுதென் மனசு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.