புதியவை

பனிவிழும் மலர்வனம் (நெடுந்தொடர்) ரதி மோகன் டென்மார்க்அத்தியாயம்-1

சில்லென்ற மார்கழி பனிக்குளிர்..ஆள் அரவம் இன்றிய வீதியில் மெல்ல நகர்ந்தது மதுவின் ரொயோட்டா கார்..
கண்ணுக்கு எட்டியதூரம்வரை பனிப்படலம் வீதியை மூடியிருந்தது.. கட்புலனுக்குள் எட்டாத்தூரம்வரை அந்த வீதி பனிப் புகாரின் ஆளுமைக்குட்பட்டிருந்தது. அவளுக்கு கார் ஓட்டும் அனுபவம் பெரிதாக இருக்கவில்லை.. அண்மையில்தான் கார்ச்சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருந்தாள். ஆம் மது புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழச்சி... சைவ ஆசாரமான குடும்பத்தில் இருந்து வந்தவள். படிப்பதற்காக தாய் தந்தை சகோதர்ர்களை பிரிந்து ஐரோப்பாக்கு இடம் பெயர்ந்தவள்... மதுமிதா என்ற மது ஐரோப்பாவின் எழில் கொஞ்சும் அழகான டென்மார்க் நாட்டில் மாமா மாமியுடன் வசித்து வருகிறாள்.. ஆரம்பத்தில் இந்த குளிரும்
வேற்று மொழியுடனான அந்நிய கலாச்சாரமும் அவளுக்கு பிடித்திருக்கவில்லை...
எல்லாமே நாளடைவில் பழகி போக இந்த நாட்டு மக்களில் ஒருத்தியானாள்...
புலம் பெயர்ந்தாலும் எம்மவர்கள் தம்மொழி பழக்கவழக்கங்களை மறக்கவில்லை என்பதற்கு அவளின் மாமா குடும்பம் ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. மாமி விரதங்கள் அனுஷ்டிப்பதும் சைவப்பரம்பரைக்குரிய ஆசாரத்தோடு சாம்பிராணி மணத்துடன் ஒவ்வொரு பொழுதுகளும் இவர்கள் வீட்டில் விடிகிறது..
மதுமிதாவின் மாமா பையன் சங்கர் வைத்தியத்துறையில் படிக்கிறான். எவருடனும் அதிகம் பேச மாட்டான். சிரிப்பதற்கு கூட நேரம் செலவழிக்காத வித்தியாசமானவன். அவளின் மாமா மகள் சங்கீதா உயர்தரம் படிக்கும் ஜாலியான பெண்.. இவர்களோடு மதுமிதாவின் வாழ்வு...
சற்று விரைவான வேகத்தோடு காரை செலுத்த அவள் முற்பட்டபோதும் முடியாமல் பனிப்பாறை ஒன்றின்மேல் மோதி கார் அப்படியே பெரிய ஓசையோடு நின்றது. ஒரு கணம் அவள் இதயம் நின்றது போல் உணர்ந்தாள்... " அம்மா" அலறியபடியே அவள் அங்கு தனியாய் ....

(தொடரும்)

ரதி மோகன்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.