புதியவை

சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையை இந்து சமுத்திர முத்தில் ஜொளிக்கச்செய்தவர்Dr. AWM Sameem

மீண்டும் சம்மாந்துறை ஆதா வைத்தியசாலையில்..
Dr. AWM Sameem
MBBS (SL), MD ( Surgery),
MRCS (England), Diploma in Laparoscopic Surgery (France) Fellowship in Colo-rectal Surgery (Singapore) Consultant Surgeon .
Dr. A.W.M Sameem Consultant surgeon is the First and Founder Surgeon of the Base Hospital Sammanthurai..
இவர் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் சத்திர சிகிச்சை கூடத்தில் 2012 லிருந்து 2014 ம் ஆண்டு காலப்பகுதிக்குள் வளப்பற்றாக்குறையைக் கருத்திற் கொள்ளாது கிட்டத்தட்ட 4500ற்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளைச் செய்து பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையை இந்து சமுத்திர முத்தில் ஜொளிக்கச்செய்தவர் இவர்..
இவருடைய காலப்பகுதிலேதான்..
வடக்கில் பொலனறுவை
மேற்கில் பேருவளை
தெற்கில் பொத்துவில் என தூர இடங்களில்லிருந்தும் பல இனமக்களும் திரண்டுவந்து பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
2014 July ல் இன்ஷாஅல்லாஹ் மீண்டும் வருவேன் என்று எங்கள் இருதயங்களுக்கு தைரியம் ஊட்டிச் சிங்கப்பூர் சென்ற எங்கள் Surgeon
மூதூர் வைத்தியசாலையிலும் சொற்ப காலம் கடமையாற்றிவிட்டு
மீண்டும் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் பணி புரிய
10/3/2016 இன்று பதவியேற்றுள்ளார்.
மாஷாஅல்லாஹ்.
இன்று 10/3/2016 வியாழக்கிழமை கல்முனை RDHS OFFICE ல்
Dr.AWM. Sameem surgeon கடமையேற்ற உடனே
முன்னால் கிழக்குமாகாண சுகாதார அமைசரும் தற்போதைய பாராளமன்ற உறுப்பினருமான கௌரவ MIM மன்சூர் MP DCP Chairman Ampara District அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்டு ஒரு மாதகாலமாக RDHS OFFICE KALMUNAI ல் வைக்கப்பட்டிருந்த ENDOSCOPY( வாயூடாக செலுத்தி களம்., இரைப்பை, முன்சிறு குடலின் ஒரு பகிதியைப் பார்க்கும் கமரா),
Colonoscopy ( பெருங்குடல் பார்க்கும் கமரா). .. Anaesthesia mechine என்பன தற்போதைய கிழக்குமாகாணசபை சுகாதார அமைச்சர் கௌரவ நஸீர் இனால் Dr.AWM Sameem consultant surgeon, Dr. YBM Abdul Azeez MS BH - Sammanthurai என்பவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் இம்மாதத்துக்குள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மாபெரும் விழாஒன்றின்மூலம் இவ்வுபகரணங்கள் அனைத்தும் ( Laparascopy, Endoscopy, Colonoscopy, Anaesthesia machine, CR System, and CSSD Instruments) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு சேவைக்கு விடப்படும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
மேலும் தற்போது கடமையில் உள்ள Dr. V. Thayalan consultant surgeon அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (14/3/2016) மூதூர் வைத்தியசாலைக்குச் செல்லவுள்ளார்..

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.