புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2016 நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டு கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இணுவையூர் சக்திதாசன்

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு  மார்ச்  மாதம் 2016  நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டு கவினெழி   பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இணுவையூர் சக்திதாசன்

தலைப்பு .. வாக்குத் தவறாத நாக்கு
                                                          
                                       கவினெழி இணுவையூர் சக்திதாசன்
 எனக்கு நீ பலம் உனக்கு நான் பலம் 
வெட்டியாடி வருவாய் குட்டி போட்ட நாய் போல 
பிணக்கு தீர்க்க வரும்போது
பெட்டிப் பம்பாய் நீ ஒட்டிக் கொள்வாய்

எனக்குள்ளே ..
நரம்பில்லா நாக்கென்று பிறருன்னை
நையுடைப்பு செய்தாலும்
வரம்பு மீறி போகாத சொல் வாக்கு நீ
உன்னால் தான் எனக்கிந்த செல்வாக்கு
பொய் மையில் வாய்மையே கொல்ல
போறண்மையில் பிறர் குறை மெல்ல
போதையே தலைக்கு மேல் கொள்ள
பெருமையை உனக்கு நீயே கொள்ள
வாக்கு தவறிய பாதையில்
வாங்கிக் குவித்த பணம் கற்றையாக இருந்தாலும்
போக்கத்தைய போக்கினில் நின்மதியேது ?
கஞ்சி குடித்தாலும் வறுமையுடன்
பிச்சை யெடுத்தாலும் பொறுமையுடன்
கந்தையானாலும் கசக்கி கட்டி
விந்தையுலகில் வாக்கு தவறாத நாக்கில்
சிறக்கும் வாழ்வு நாளும்
உடம்பு நீரால் சுத்தமாவது போல
உள்ளம் உண்மை யால் சுத்தமாகும்
தடம் புரண்டாலும் புகை யிரதம் தெருவிலோடாது
புடம் போட்டு வாழும் வாழ்வில் உன்னை
படம் போடும் உலகு வாக்கு தவறாத நாக்கென்று
திடமுடன் வாழ்த்தும் நாளும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.