புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 2016 நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் இரண்டாவது இடத்தைப் பெற்று கவி த்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர். கோவிந்தராஜன் பாலு. தமிழ்நாடு.

                                                            கவி த்தீபம் கோவிந்தராஜன் பாலு. தமிழ்நாடு.
தலைப்பு .. வாக்குத் தவறாத நாக்கு 

குறள் வெண்பா.
தமிழே உயிராய் தணியாத தாகமாய்
வாழ்வோரின் சொல்லே இனிது.
தமிழன் உயர்ந்திட தாங்கும் மனிதம்
உயர்வெனப் போற்றப் படும்
சொல்லும் செயலும் சொலல்வல்லன் 
ஆற்றுவான்
வெல்லும் வழிகள் அறிந்து.
நெற்றி வியர்வை நிலத்தில் வழியும்
உழைப்பு உயர்வெனப் படும்.
தர்மத்தின் சாட்சியாய் தர்மம் தழைத்திட
காத்திடுவான் சீர்தூக்கிக் கொளல்.
தன்னலம் நீங்கி தனக்கென வேண்டான்
பொதுநலம் போற்றுதல் சீர்.
இரந்தும் இரப்போர்க்கு ஈயாத நெஞ்சும்
உலகில் மறைதல் நலன்.
மகளிர் பெருமை மலர்ந்திடக் காப்பவன்
வாக்குத் தவறாத நாக்கு.
அள்ளிக் கொடுப்பவன் அன்பால் மலர்ந்திடும்
வாக்குத் தவறாத நாக்கு.
பிறரின் மனதில் நிறைந்தவன் இனிதே
வாக்குத் தவறாத நாக்கு
.
கவிஞர். கோவிந்தராஜன் பாலு. தமிழ்நாடு.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.