புதியவை

கலை மகளுக்குஎன்இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்கவீத்தீபம் கலா மலேசியா கவியருவிவில்லூரான் ராஜகவி ரஹில்
கலை மகளுக்குஎன்இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்

கவீத்தீபம் கலா மலேசியா
கலைமகள் நாமம் உச்சரிப்பாள்
கவிமகளும்

உன் கவி வலைதான்
படிக்கப் படிக்க மீனாகின்றன இதயங்கள்
உன் தமிழ் தொட்ட சிலையும்
உயிர் கொண்டு தட்டும் பாராட்டுக் கைகள்
மாதர் மகிமை புன்னகைக்கும்
உன் எழுதுகோல் இடமிருந்து நகர்ந்திடின்
கிழக்கின் பெண் சூரியன்
நீ
மூன்று தசாப்தங்களையும் கடந்து
நீ சுவாசிக்கிறாய் தமிழை அதன் புகழை
கடல் கடந்தும் வான் மலை தாண்டியும்
நீள்கிறது உன் ஒற்றை மை விரல்
உன் பெயர்அச்சிட்ட பின்தான்
பத்திரிகைகள் பூப்பூக்கின்றன
வானொலிகளில் உன் நாமமும் உன் தமிழுந்தான்
மின்சாரம்
தடாகம் செய்து இலைகளையும் பூக்களாக்கி
மணக்கச் செய்கிறாய் நீயே நீராகி வேராகி
ஹிதாயா எனச் சொல்லி மகிழ
தென்றலுக்கும் மிகவும் ஆசையாம்
உன் எழுத்துப் பார்த்துப் படித்து
எழுதுகோல் பிடித்த பூக்களும் புறாக்களும் அதிகம்
பாடநூலில் உன் படைப்பு
வெண் மல்லிகைகளின் விளக்கு
உன் தமிழ்ச் சேவை
ஆல்போல் இன்னும் வேரூன்ற என் வாழ்த்துக்கள்
நீ முதல் மூச்சுப் பெற்ற இந்த பொன் விடியலை
வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகிறது என் தமிழ்
நலம் வளம் எழில் புகழ் நீள் ஆயுள் பெற்று
வாழ இறைவனை வேண்டுகிறேன் .

தடாகம் தந்த தாமரை வாழ்க
கவியருவி வில்லூரான்
தடாகம் தழுவி
....தானொளிர் இரவி
விடாத முயற்சி
....விளங்கும் எழுச்சி
தடாகம் நிறை
.....தமிழ் அருவி
திடம் கொள்
.....தீர்க்க தரிசி
விடம் இல்லா
.....வீசு தென்றல்
நாடும் அறியும்
....நற்றமிழ் கோ
நீடும் வாழ
.....நின் வாழ்த்து


கலை மகளுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ராஜகவி ரஹில் 
கலைமகள் நாமம் உச்சரிப்பாள்
கவிமகளும்
உன் கவி வலைதான்
படிக்கப் படிக்க மீனாகின்றன இதயங்கள்
உன் தமிழ் தொட்ட சிலையும்
உயிர் கொண்டு தட்டும் பாராட்டுக் கைகள்
மாதர் மகிமை புன்னகைக்கும்
உன் எழுதுகோல் இடமிருந்து நகர்ந்திடின்
கிழக்கின் பெண் சூரியன்
நீ
மூன்று தசாப்தங்களையும் கடந்து
நீ சுவாசிக்கிறாய் தமிழை அதன் புகழை
கடல் கடந்தும் வான் மலை தாண்டியும்
நீள்கிறது உன் ஒற்றை மை விரல்
உன் பெயர்அச்சிட்ட பின்தான்
பத்திரிகைகள் பூப்பூக்கின்றன
வானொலிகளில் உன் நாமமும் உன் தமிழுந்தான்
மின்சாரம்
தடாகம் செய்து இலைகளையும் பூக்களாக்கி
மணக்கச் செய்கிறாய் நீயே நீராகி வேராகி
ஹிதாயா எனச் சொல்லி மகிழ
தென்றலுக்கும் மிகவும் ஆசையாம்
உன் எழுத்துப் பார்த்துப் படித்து
எழுதுகோல் பிடித்த பூக்களும் புறாக்களும் அதிகம்
பாடநூலில் உன் படைப்பு
வெண் மல்லிகைகளின் விளக்கு
உன் தமிழ்ச் சேவை
ஆல்போல் இன்னும் வேரூன்ற என் வாழ்த்துக்கள்
நீ முதல் மூச்சுப் பெற்ற இந்த பொன் விடியலை
வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகிறது என் தமிழ்
நலம் வளம் எழில் புகழ் நீள் ஆயுள் பெற்று
வாழ இறைவனை வேண்டுகிறேன் .
ராஜகவி ரஹில் 
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.