புதியவை

வாக்குத் தவறாத நாக்கு.சூரிய கவிதீபம் "மு.யாகூப் அலி.(முத்துப்பேட்டை)

வாக்குத் தவறாத நாக்கு.சூரிய கவிதீபம் "மு.யாகூப் அலி.(முத்துப்பேட்டை)
மண்ணிலே வாழும் உயிரில்
வாக்கு தவறாத நாக்கு ...உள்ளதென்றால்
தாயின் உள்ளத்தில் வரும்
பாசமே ...தவறாத நாக்காகும்.
கல்வியில் நம்பிக்கையில்
தேர்வெழுதி தேர்ச்சி பெற
வாக்கு தவறாத நாக்கு ...
வாக்களிக்கும் போது பெருமையே.
புகுந்த வீட்டு மானத்தை -ஒரு போதும்
பிறந்த வீட்டுக்காய் இழக்க மாட்டேன் ...இந்த
வாக்கு தவறாத நாக்கு
உறுதி செய்தால் பெருமையே.
தந்தையின் முதுமைக்கு -நான்
தந்தையாக இருப்பேன் -என்கின்ற
வாக்கு தவறாத நாக்கு
கூறி விட்டால் ...கூடுமே ஆயுளும்.
உனக்குத்தான் நான் ...வாழ்கிறேன்
நீ ...தான் உலகம் ...போன்ற
வாக்கு தவறாத நாக்கு ...
வாழ்க்கை அமைந்தால் வசந்தமே.
வீண் விரயமுள்ள செலவுகள்
மது,மாது,சூதுகள்,இல்லையென்ற
வாக்கு தவறாத நாக்கு
வாழ்வெல்லாம் இன்பமே.
பொய் சொல்லும் நோக்கில்
மெய் கொல்லும் அச்சத்தில்
வாக்கு சொல்லும் நாக்கு
உண்மைக்கு போராடும்.
விஷமுள்ள பாம்பும் ..நம்மை
ஒன்னும் செய்ய இயலாது.
வாக்கு தவறும் நாக்கு -இருப்பின் 
பல பாம்புகளின் விஷத்தை விட கொடியது. "

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.