புதியவை

அவனுண்டு அறிவாயோ-வில்லூரான்--

 
குற்றமுள்ள நெஞ்சிலவன்
......குடியிருக்க வர மாட்டான்
இதயமது இங்கே சுத்தமானால்
.....இறைனங்கே தானிருப்பான்
சிந்தையிலே தெளிவிருப்பின்
.....சிலையிலவன் தோணமாட்டான்
அறியாமை இருளிருப்பின்
.....அங்கவனும் உறையமாட்டான்
தத்துவத்தை அறியாதவரையவன்
.....தரித்தங்கு இருக்கமாட்டான்
புலனதுவோ  புறத்தலையின்
.....புலப்பட அவன் நிற்கமாட்டான்
உச்சரித்தால் அவன்  நாமம்
....உள்ளமங்கே  புனிதமாகும்
மாயையிலே நாமிருப்பின்
....மறைந்தங்கு தானிருப்பான்
கடவுளிடம்  கலந்துறவாடிக்
....களிகொண்டு நீ இருக்க
இதயத்தை இன்றே சுத்தமாக்கு
....இறைவனங்கே  தங்கிடுவான்
மூழ்கிவிட்டால்  ஆசையிலே
.....மூலப்பொருள் தெரியாது
ஆழ்ந்துவிடத் தியானத்தில்
......அவனுடனே  வந்திடுவான்
அதிகாரம் கூடி விட்டால்
......அவன் நெறி மாறிடுவான்
அன்பதிலே கூடி விட்டால்
....அவன் உன்னை ஆண்டிடுவார்
ஆண்மாவைக் கண்டறிய இங்கே
.....ஆன கருவி  கண்டறிவீரோ
ஆகையினால் அவன் உண்டு
......அகத்தைச்  சுத்தமாக்கிடு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.