புதியவை

நிறம் மாறிய பூக்கள் - கோமதி முத்துக்குமார்மனங்களின் சாரல் கொண்டு,
நனைந்த காதல் ரோஜாக்கள்,
இதயங்களின் துணை
கொண்டு சுவாசித்தது!!
புல்லின் மீதமர்ந்த
பனித்துளியின் சுகமாய்,
நகர்ந்தது காதல்!!
பூக்களும் கொஞ்சம்
பேராசை கொண்டது,
மணம் கொண்ட
காதலைக் கண்டு!!
மதமெனும் அரக்கன்,
பொறாமை கொண்டான்
உண்மைக் காதல் கண்டு!!
காதலை பிரிப்பதாய்
சபதம் கொண்டான்
மதவெறியன்!!
மதங்களின் கோரதாண்டவத்தால்,
நிறம் மாறிய பூக்களாய
மாறியது உண்மைக் காதல்!!!
காதலர்கள் பிரிக்கப்பட்டனர்!!!
            

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.