புதியவை

காத்தான்குடியில் இலக்கிய சந்திப்பு

காத்தான்குடியில் இலக்கிய சந்திப்பு 

காத்தான்குடியிலுள்ள எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் சந்திப்பொன்று இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்றது.
சிரேஸ்;ட ஊடகவியலாளரும் எழுத்தாளரும் சிரேஸ்ட இலக்கியவாதியுமான ரீ.எல்.ஜௌபர்கான் தலைமையில் நடைபெற்ற இந்த இலக்கிய சந்திப்பில் காத்தான்குடியிலுள்ள மூத்த எழுத்தாளர்கள் கலை இலக்கியவாதிகள் கவிஞர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் தடாகம் கலை இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  உட்பட அதன் சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர் வரும் மே மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவுக்கு செல்வது தொடர்பான ஆலோசனை இடம் பெற்றதுடன் இது தொடர்பில் இலங்கையிலிருந்து செல்லும் குழுவில் காத்தான்குடியிலிருந்து செல்லும் எழுத்தளாளர்கள் மற்றும் கலை இலக்கிய வாதிகளின் விபரங்கள் பெறப்பட்டன.
அத்துடன் மலேசியாவில் நடைபெற்றவுள்ள இலக்கிய விழா தொடர்பாகவும் அதற்கு இலங்கையிலிருந்து செல்பவர்களின் ஏற்பாடுகள் தொடர்பாகவும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
இதன் இறுதியில் அன்மையில் மறைந்த எழுத்தாளர் புண்ணியாமீன் அவர்களுக்கான துஆப்பிராத்தனையும் நடைபெற்றது.









 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.