புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு சர்வதேச மட்டத்தில் மார்ச் மாதம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கு பற்றி பாராட்டுக்களை பெரும் கவிஞர்கள்

சுரேஷ் சீனிவாசன்

வாக்குத் தவறாத நாக்கு.சுரேஷ் சீனிவாசன்

தேடிப்போய் அவனேதான் காதல் செய்தான்
தவறாமல் மணப்பேன்நான் வாக்குத் தந்தான்
ஆடிமாதம் ஆகாது பொறுக்கச் சொன்னான்
அவள்மயங்கப் பேசித்தான் மோசம் செய்தான்
மூடியவாய் அதனுள்ளே உறங்கும் நாக்கு
மூளையதன் கட்டளையால் பேசும் வாக்கு
கேடுகெட்ட மனிதமனம் மாறிப் போக
கெட்டப்பெ யர்பெற்ற துநல்ல நாக்கு

சத்தியமாய் தந்திடுவேன் என்றுச் சொல்லி
சளைக்காமல் நடந்திடுவார் துயரம் சொல்லி
பத்துபணம் போதுமென்று கெஞ்சிக் கெஞ்சி
பக்குவமாய் பெற்றிடுவார் நம்மை மாற்றி
எத்தனைநாள் ஆனாலும் கொடுக்க மாட்டார்
எதைஎதையோச் சொல்லியவர் நழுவிப் போவார்

புத்திகெட்ட மனிதமனம் மாறிப் போகப்
பாவமிந்த நாக்கினையேத் தவறு என்பார்

தரமில்லா எண்ணங்கள் அதனைக் கொண்டு
தன்னலமே வேண்டிதினம் பேசச் செய்வார்
அரக்கன்போல் கோபமாகக் கத்தச் சொல்வார்
அவர்சொல்ல நான்செய்வேன் அந்தப் பாவம்
நரம்பில்லா நாக்கென்று என்னைச் சொல்வார்
நரம்பின்றி அசையவே முடியா தன்றோ
கரும்பினைப் போல் பேசிடவே ஆசை உண்டு
கருவியான நான்என்ன செய்யக் கூடும்

பாரதனில் புனிதராக சிலரு முண்டு
பேசியசொல் அதன்படியே நடப்ப துண்டு
ஊரவரை உத்தமராய் சொல்வ துண்டு
உளமேற்றுத் தலைவராகக் கொள்வ துண்டு
ஈரமான நாக்கதுவும் நல்லன பேசும்
இன்னலது வந்தாலும் உண்மைப் பேசும்
உரைத்திட்ட வார்த்தைகள் நிலைத்து நிற்கும்
உயர்ந்ததுதான் வாக்கினைத்த வறாத நாக்கு

சுரேஷ் சீனிவாசன

அபு நசீர்- தோப்பூர்
 வாக்குத் தவறாத நாக்குஅபு நசீர்- தோப்பூர்


வாக்கினை மறந்த போக்கினால் இன்று
வாழ்விலே எத்தனை வன்முறை..
நாக்கினால் பேசிடும் வார்த்தைகள் யாவும்
வாய்மையாய் இருப்பதே நன்முறை..!
உண்மைக்குப் புறம்பாக பேசிடும் வார்த்தை
ஒரு போதும் எம்வாழ்வை உயர்த்துவதில்லை
நன்மையை நாடி நாக்கினை அசைத்தால்
நனிதனில் இடரொன்றும் இருப்பதுமில்லை..
நாடிடும் திசையிலே பேசிடும் நாக்கை
நன்மையின் வழியிலே திருப்பிட வேண்டும்
வாக்கினை அளித்து மறந்து நாம் வாழும்
வாழ்வினை இன்றே ஒழித்திட வேண்டும்..!
சொல்லிலே உள்ள வாழ்வினை இன்றே
செயலிலே காட்டிட முயல்வோம்
செல்லாத காசாகி எம் வார்த்தை மண்ணில்
சிதறாமல் காத்து நாம் வாழ்வோம்..!
காதலின் உணர்விலே வாக்கினை அளித்து
கதறிடச் செய்வது நன்றோ..?
சாதலின் போதும் வாக்கினை வென்று
சாதனை படைப்பதே நன்று..!
பணத்துக்காய் வாக்கினை பாழாக்கி விட்டு
குணத்தினைப் பகிர்வதில் என்ன லாபம்
உடம்பிலே அங்கங்கள் சிதறிய போதும்
சிதையாமல் வாக்கினை காப்பதே வீரம்..!
வாக்கினைத் தவறாத நாக்கது இருந்தால்
நம் பெயர் பேசிடும் நானிலம் என்றும்..
சொல்லிலும் செயலிலும் நேர்மை யிருந்தால்
மண்ணறை வாழ்விலும் மங்கலம் பொங்கும் !
அபு நசீர்- தோப்பூர்
                                                                சி. அருள் ஜோசப் ராஜ் 

வாக்குத் தவறாத நாக்கு.சி. அருள் ஜோசப் ராஜ் 

உயிர்களுக்கு எலும்பில்லா ஈர நாக்கு
==உண்டென்ற உண்மையையே அறிவோம் நாமே 
பயிலுகின்ற மக்களெல்லாம் நாவசைத்தே

==பாங்குடனே சொல்லெடுத்து பேசிடுவார் 
வையிரேற்றி சிரிப்பதற்கும் வாக்கு உண்டு 
===வந்ததெல்லாம் சொல்வதற்கும் நாக்கு உண்டு 

ஆயிரமாய்ச் இருந்தாலும் சொற்கள், தங்கும்
==ஆணவத்தில் பிறக்கின்ற சொற்கள் கற்கள்
எண்ணத்தை உணர்வதனை வெளியல் சொல்ல 
==எழுகின்ற ஒலிவடிவே வாக்கு! சொற்கள் 
பண்பதனைப் பெற்றுவிடும் இடத்திற்கேற்ப 
==பகுத்தறிந்தால் சொற்களிலே குற்றம் இல்லை 

எண்ணத்தின் வெளிப்பாடாய் நன்மை தீமை 
==என்றும் நம் சொற்களிலே தோற்றம் காணும் 
மண்ணுலகில் கனியவைக்கும் பேச்சு! நல்ல 
==மனித நேயம் வளர்த்துவிடும்! உயிரின் மூச்சு!
உண்மையென்றும் பொய்யென்றும் சொல்லில் இல்லை 
==உரைத்தலைநீ மறைத்தாலோ பொய்யே என்பார் 

தண்ணீரில் மிதக்கும்நா வளைந்து நீண்டு 
==தன்போக்கில் அதிர்வடைந்தே எழுப்பும் ஓசை 
விண்ணோக்கி கோளிருக்கும் இடமே பார்த்து 
வியந்துசொல்வார் ஜோதிடம்தான் ! வாக்கு சுத்தம் 
கொண்டதனால் சொன்னசொல்லே பலிக்கும் என்பார்!!
கொள்கை பல அறிவிக்கும் அரசு என்றும்

வாய்மையே வெல்லு மென்றுதன் முதன்மை நோக்கம் 
வாய்த்தோர்க்கு வகையாக உரைத்தல் பாரீர்!!
மெய்யென்றே சொல்லிவிட்டே பொய்யைச் சொல்லும் 
மெய்யன்பர் நாட்டினிலே உள்ளதாலே 
பாய் போட்டு படுக்க வேண்டும் வாக்கு நாக்கில் 
பாழுமுயிர் போகையிலும் உண்மை சொல்லி 

சாய்ந்திடுவோம்! வாக்குமாறா நாக்கதற்கு 
சாகாநல் வரமுண்டு சொல்வோம்! வெல்வோம்!! 

சி. அருள் ஜோசப் ராஜ் 
                                                                  மல்லை தமிழச்சி,
வாக்குத் தவறாத நாக்குமல்லை தமிழச்சி,செங்கல்பட்டு,
புத்தனின்
நாவில் தவறாத வாக்கு
தம்ம பதம்......
போதிதர்மனின்
நாவில் தவறாத வாக்கு
ஜென் தத்துவம்.....
தொல்காப்பியனின்
நாவில் தவறாத வாக்கு
இலக்கணம்.....
வள்ளுவனின்
நாவில் தவறாத வாக்கு
திருக்குறள்.....
கம்பனின்
நாவில் தவறாத வாக்கு
கவிதை.....
ஔவையின்
நாவில் தவறாத வாக்கு
ஆத்திச்சூடி....
விவேகானந்தரின்
நாவில் தவறாத வாக்கு
விழிப்பு.....
வள்ளலாரின்
நாவில் தவறாத வாக்கு
சமத்துவம்......
காந்தியின்
நாவில் தவறாத வாக்கு
அகிம்சை.....
நேருவின்
நாவில் தவறாத வாக்கு
பஞ்சசீலம்.....
அம்பேத்கரின்
நாவில் தவறாத வாக்கு
சட்டம்...
பெரியாரின்
நாவில் தவறாத வாக்கு
மூட ஒழிப்பு....
பாரதியின்
நாவில் தவறாத வாக்கு
பெண் விடுதலை....
காமராசரின்
நாவில் தவறாத வாக்கு
கல்வி.....
பாரதிதாசனின்
நாவில் தவறாத வாக்கு
புரட்சி....
ஜீவாவின்
நாவில் தவறாத வாக்கு
தொழிலாளர் நலம்.....
அண்ணாவின்
நாவில் தவறாத வாக்கு
மேடை முழக்கம்....
கண்ணதாசனின்
நாவில் தவறாத வாக்கு
செந்தமிழ்.....
அப்துல் கலாமின்
நாவில் தவறாத வாக்கு
கனவு காண்பது....
.
அன்னை தெரேசாவின்
நாவில் தவறாத வாக்கு
கருணை.....
இப்போதும்.....எப்போதும்....
தமிழனின்
நாவில் தவறாத வாக்கு
தமிழீழம்.....
மல்லை தமிழச்சி,செங்கல்பட்டு, 603001

                                                          தேனூர் மைந்தன்.

வாக்குத் தவறாத நாக்குதேனூர் மைந்தன்.
நல்லாட்சி தனில் நானிலம்
செழிக்க நாட்டின் நலம் கருதி
மக்கட் மனதில் நிலை பெறுபவன்
வாக்குத் தவறா நாக்குடையவனே...

ஔவையும் வள்ளுவனும் தாம்
கூறும் வாக்குத் தவறின்
வையகமே தறி கெட்டு வாடி
வதங்கி நிலைகுலைந்து போகும்.

கொல் புலி மானை குறி வைத்து
பாயும் வேளை இடை மறித்து
பாலூட்டி பின் உன் பசியாற
வருவதாய் கூறி அவ்விடம்
வந்து நின்ற மானும்
வாக்குத் தவறா நாக்குடையதே...

மானிடம் ஏமாற்றும் மானிடராய்
மந்திரி எனும் போர்வையில் சில நரிகள்
நற்சேவை செய்வதாய் நாடகம் நடத்தும்
வாக்குத் தவறிய நாக்காளர் இனமே...

பசுக் கன்றுக்கேற்பட்ட துயர்கண்டு
தனயனை காலனிற்கு தாரை வார்த்த
மனுநீதி கூட வாக்கத் தவறா மன்னனே...

இடர் வந்த போதும் அசைந்திடாத
நாக்கு தவராத வாக்காளன் அரிச்சந்திரனே..
மாவீரர் வஞ்சகமாய் காலர் கை சேர
கை கொடுத்தது வாக்குத் தவறிய நாக்கே...

வழி வழியாய்ப் போற்றும் வாக்குத் தவறின்
வாழ்ந்திடும் வாழ்க்கை பொய்த்திடும்.
பலனில் பிழையாய் கணக்கு கூறின்
பஞ்சாங்கமும் ஒதுக்கப்படும்...

வாக்குக் கொடுத்த மனக் காதலன்
நாக்குத் தவறாவிடின் வசந்தமே வாழ்க்கை.
வாக்குத் தவறின் தர்மரின் நிலையே
தரணியில் நம்மை சேர்ந்துடும்...

=>தேனூர் மைந்தன்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.