புதியவை

இந்த வாரம் ஆதங்கத்தின்அரங்கம் நேர்காணல் மூலம் உங்களை சந்திக்க வருகின்றார் இலங்கையை சேர்ந்த ஆசிரியையும் கவிஞருமான சகோதரி ராஜ் சுகா நேர்காணல் ஆர் எஸ் கலா


சகோதரி ராஜ் சுகா  
இந்த வாரம் ஆதங்கத்தின்அரங்கம் நேர்காணல் மூலம் உங்களை சந்திக்க வருகின்றார் இலங்கையை சேர்ந்த ஆசிரியையும் கவிஞருமான.

சகோதரி ராஜ் சுகா
நேர்காணல் ஆர் எஸ் கலா
வணக்கம் சகோதரி ராஜ் சுகா  
ஆர் எஸ் கலா
ஆதங்கத்தின் அரங்கம் வழி நான் சந்திக்க வந்துவிட்டேன் உங்களைப் பற்றி சுருக்கமான அறிமுகத்தோடு ஆதங்கத்தின் அரங்கத்தின் உள் நுழைவோம் அறிமுகப் படுத்துங்கள் சகோதரி ? தாங்கள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள் படித்துக்கொண்டா இல்லை பணி புரிகின்றீர்களா இல்லத்தரசியா?
ராஜ் சுகா*
நான் ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் திருமணமாகவில்லை

ஆர் எஸ் கலா

ஓ இன்னும் திருமணம் ஆகவில்லையா நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்க வாழ்த்துக்கள் தங்களின் எதிர்கால கணவனை தேர்வு செய்யும் போது இலக்கிய ஆர்வாளராகத்தான் தோடுவீர்களோ ?
.ராஜ் சுகா 
*மிக்க நன்றி. அப்படி எவ்விதமான நோக்கங்களுமில்லை பெற்றாரின் விருப்பப்படி எனது திருமணம் அமையும்.
ஆர் எஸ் கலா
நீங்கள் சிறுவயதுப் பெண் என்பதால் வீட்டில் உள்ளவர் கவணம் உங்கள் மேல் அதிகமாகவே இருக்கும் இலக்கிய பயணம் செய்யும் போது வெளியூரில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் அப்போது பெற்ரோர் தடை போடுவது இல்லையா? பொதுவாக பல பெண் பிள்ளைகள் எதிர் நோக்கும் பிரச்சனை இவை உங்கள் எழுத்துப் பணிக்கு ஊக்கம் அளிப்பாது தாயா? தந்தையா இல்லை இருவருமா?
. ராஜ் சுகா 
வெளி இடங்களுக்கு நான் தனிமையில் சென்றது கிடையாது. நெருங்கிய, நம்பிக்கையான நட்புக்களுடன், வயதில் மூத்த உறவுகளுடந்தான் எனது தூரப்பிரயாணங்கள் அமைந்ததுண்டு. அதுவும் மிக அண்மையில்தான் அவ்வாறான பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டது. குடும்பத்திலிருந்து தடைகள் வரவில்லை காரணம் எனது நண்பர்களை என் பெற்றாருக்கும் தெரிந்திருந்தபடியாலும் என் மீதுள்ள நம்பிக்கையினாலும். எனது எழுத்துப்பணி குடும்பத்தில் பூரண ஒத்துழைப்புடன் செவ்வனே நகர்கின்றது.


ஆர் எஸ் கலா

நீங்கள் ஒரு ஆசிரியராக இருப்பதால் சில பாடசாலையில் நிருவாகத்துறை தவறு விடுவது உண்டு அப்போது ஏதாவது ஒன்றை பார்த்து ஆதங்கப் பட்டதுண்டா? ஐயோ நாம் அதிபராக இருந்தால் இதை மாற்றி அமைக்கலாமே என்று மன அளவில் வேதனை பட்டதுண்டா?

ராஜ் சுகா
*நிருவாகத்துறையில் ஏதேனும் தவறுகள் குறைகள் இருப்பின் நேரடியாக அவர்களிடம் கூறுவேன் ஆதங்கப்பட்டு மனதளவில் வேதனைப்பட மாட்டேன் என்னால் முடிந்தளது அதுபற்றி பேசுவேன்.
ஆர் எஸ் கலா
கவிஞர் அறிமுக பகுதிக்கு பல கவிஞர்களை சந்தித்து இருப்பீர்கள் அப்போது ஏற்பட்ட சுவார்சியமான விசயம் கசப்பான சம்பவம் ஏதேனும் உண்டா?
ராஜ் சுகா 
கவிஞர்களை அறிமுகப்படுத்தும்போது அவர்கள் காட்டும் ஆர்வம் மிகவும் சுவாரஸ்யமானது. அதனை விட பலபேர் இதிலிருந்து விலகியோட நினைப்பதும் கேள்விகளை கேட்டுமுடித்த பின்னர் பதில் சொல்லாமல் மழுப்புவதுமாக பெரும்படைப்பாளிகளால் பலதடவைகள் வேதனைப்பட்டதுண்டு. இதுபோல பல அநுபவங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது சில பேரை வாசிக்கவும் சில பேரை நேசிக்கவும் சிலரை பற்றி யோசிக்கவும் நல்ல சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.
 ஆர் எஸ் கலா
தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் போட்டிகளில் பங்கு எடுத்தது உண்டா? அதில் தாங்கள் சாண்றிதழ் விருது ஏதேனும் பெற்றது உண்டா? 
ராஜ் சுகா 
*ஆமாம் 2013ம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டியில் எனது கவிதைக்கு "கவித்தீபம்" என்ற நாமம் சூட்டப்பட்ட சான்றிதழும் 2015ல் தடாகம் கலை இலக்கிய வட்டமும் கனடா படைப்பாளிகள் உலகமும் நடாத்திய விருது வழங்கும் விழாவில் "கவியருவி" என நாமமிடப்பட்ட சான்றிதழும் வழங்கப்பட்டது.
ஆர் எஸ் கலா
தடாகம் இலக்கிய வட்டம் பற்றி தாங்களும் நங்கு அறிவீர்கள் அந்த வகையில் தடாகத்தின் இலக்கிய பணி பற்றியும் அதில் இடம் பெறும் பல நிகழ்வுகளில் தங்களை கவர்ந்தவை எவை? எனவும் தாங்கள் மனம் திறந்து பாராட்டிய ஒரு விசயம்? தடாகத்தைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் இவைகளைக் கூறுங்கள் ?
ராஜ் சுகா 
* தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது தனியொரு பெண்ணால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு பல நிகழ்ச்சிகள் விழாக்கள் போட்டிகள் பணிகளை வெளியீடுகளை நடத்தி சாதித்து வருகின்றது. எத்தனையோ சொல்லடிகள் கல்லடிகளை தாங்கி சளைகாது போராடி வரும் தடாகம் ஆற்றிவது பெரும்பணியே. புதியவர்களை இணங்கண்டு வாய்ப்பு வழங்குவதிலும் படைப்பாளிகளை கெளரவிப்பதிலும் முன்னிற்பது வரவேற்கத்தக்கது. தடாகத்தின் எல்லா செயற்பாடுகளும் காலத்துக்கு பொறுத்தமானதும் தேவையானதுமே
ஆர் எஸ் கலா
தடாகம் வலைப்பூ நிருவாகி சகோதரி கலைமகள் ஹிதாயாரிஸ்வி அவர்களை பலர் அறிந்ததுண்டு பேசி பழகியதுண்டு அவரை விடுத்து அவர் களின் குடும்ப அங்கத்தவர்களுடன் பழகும்வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கவில்லை ஒரு சிலரை தவிர இதில் நீங்களும் ஒருத்தர் அவர்களின் அணுகு முறை பற்றியும் அவர்களில் தங்களுக்கு பிடித்தவை பற்றியும் கூறுங்கள் ?
ராஜ் சுகா 
* உண்மையில் இது வித்தியாசமான ஓர் அனுபவமே கலைமகள் ஹிதாயாரிஸ்வி அவர்களை ஒரு கவிதாயினியாக அறிந்த நான் அவர்களுடனான நட்பின் பின்னர் அவர்கள் எனக்கொரு மூத்த சகோதரியாக மாறியது வியப்பே. இனம் மதம் பிரதேசம் கடந்து வெறும் அன்பில் மட்டுமே உறவானோம். அவர்களது குடும்பமும் எனது குடும்பமும் மிக நெருக்கமான தொடர்பினை கொண்டது. இலக்கியமே இவ்வாறான உறவுகளை எனக்கு அறிமுகம் செய்தது. ஆனால் இலக்கியம் இல்லாமல் குடும்ப உறவாக நாம் இருப்பதே விஷேடமானது.

 
ஆர் எஸ் கலா
கவிஞர் றியாஸ் நூல் வெளியீட்டின் போது தடாகத்தின் ஏற்பாட்டில் இந்தியா இருந்து வந்த கவிஞர் களையும் கௌரவப் படுத்தும் பொருட்டு அன்றைய நிகழ்வு அமைந்தது தாங்களும் கலர்ந்து கொண்டீர்கள் அந்த விழா பற்றி சில வரிகள் கூறுங்கள் ?
ராஜ் சுகா 
* படைப்பாளி கெளரவப்படுத்துவதில் தடாகத்திற்கு பெரும் பங்கு உண்டு அந்தவகையில் இந்திய படைப்பாளிகளை கெளரவித்து விருது வழங்கிய நிகழ்வை பாராட்டியே ஆகவேண்டும். இவ்வாறான நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும். எத்தனையோ தடைக்கற்களுக்கு மத்தியில் இந்நிகழ்வினை நடாத்திய தடாக அமைப்பாளர் கலைமகள் அவர்களுக்கு இவ்வேளையில் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, நம்மால் எதுவும் செய்ய முடியாவிட்டால் சாதிப்பவர்களுக்கு இடங்கொடுத்து இடையூறு விழைவிக்காமல் ஒதுங்கி நின்றுகொள்ள வேண்டும் என்பதனையும் சொல்லிக்கொள்கின்றேன். இந்நிகழ்வில் சிறு சிறு புரிந்துணர்வற்ற விடயங்கள் நடந்ததாக பின்னர் அறிந்துகொண்டேன். எப்படியோ படைப்பாளிகள் எனும்போது சில விஷேசித்த குணங்களும் எம்மிடம் காணப்படவேண்டும். சூழ்நிலைக்கு தக்கவாறு விட்டுக்கொடுப்பவர்களாக கை கொடுப்பவர்களாக இருந்தால் நமக்குள் எவ்விதமான ஏற்றத்தாழ்வுகளும் எழப்போவதில்லை

ஆர் எஸ் கலா
தடி எடுத்தவன் எல்லாம் சண்டைக்காரன் பேனா பிடித்தவன் எல்லாம் கவிஞன் என்ற ஒரு நிலைப்பாடு முகநூல் ஏற்பட்டுப் போச்சு என்ற ஒரு பேச்சு பலர் வாயிலும் இவை பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

ராஜ் சுகா  *உண்மைதான் இரண்டு மூன்றே நாட்களில் கவிஞர்களாக பதவி உயர்வு பெற்ற பலரை நாம் முகநூலில் அன்றாடம் சந்திக்கின்றோம். உண்மையில் இது இலக்கியத்துக்கு எவ்வகையில் வளர்ச்சியை ஏற்படுத்துமென பெரியவர்கள்தான் கூறவேண்டும். நட்பு என்பதற்காக எதைப்பதிவிட்டாலும் லைக் போடும் கலாச்சாரம் உருவாகிவிட்டதால் காத்திரமான படைப்புக்கள் வெளிவருவதில் தாமதமாகின்றது. எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் கடமை, அவர்களை வளர்த்துவிடும் பொறுப்பு எம்மனைவருக்குமே உண்டு. எழுத்துக்களை சிறந்த ஆலோசனைகள் வழிகாட்டலினூடாகவே சீர்படுத்த வேண்டுமே தவிர எழுதிய எல்லாருக்கும் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கேலிக்குறியாக்கிவிடக்கூடாது. படைப்பொன்று பளிச்சிடுமளவுக்கு பட்டைத்தீட்டப்பட வேண்டுமென்பது எனது கருத்து. அதே வேளை முகநூல் கவிஞர்கள் வெறும் வாழ்த்துக்களில் மயங்கி தமது தரத்தினை குறைத்துக்கொள்ளக்கூடாது. அதேவேளை சிறந்த வாசிப்பனுபவத்தை பெற்றவர்களாக காணப்படவேண்டும் இதனையும் ஒரு குறையாக காண்கின்றேன் அண்மைக்காலங்களில் நான் சந்தித்த புதிய கவிஞர்கள் கருத்துக்களை சொல்லும்போது, "இன்னும் வாசிக்க தொடங்கவில்லை இனிதான் வாசிக்கவேண்டும்" என்று வெளிப்படையாகவே சொன்னதையிட்டு மனம் வருந்தினேன். எனவே சிறந்த அடித்தளமிட்டுக்கொண்டு முயற்சியுங்கள் எல்லாராலும் சாதிக்கமுடியும்.


ராஜ் சுகா
பெரிய சாதனைப்பக்கங்கள் எதுவுமில்லை. இன்று எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் நம்மிடையே உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களோடு என்னுடைய எழுத்துக்களும் வாசகர்களுக்கு உகந்ததாக பயனுள்ளதாக பேசப்படக்கூடியதாக எழுதவேண்டும் என்ற நோக்கம் மட்டுமே காணப்படுகின்றது.
ஆர் எஸ் கலா
தங்களின் கவிதை தொகுப்பைகனடா படைப்பாளி உலக மையத்தால்வெளியீடு செய்யப் போவதாக ஒரு செய்தி அறிந்தேன் ஏன் அந்த முயற்சியைக்கை விட்டது ? ராஜ் சுகா
முயற்சியை கைவிடவில்லை. பல வெளியீட்டாளர்களோடு பேசியிருக்கின்றேன் சிலர் உதவுவதாக முன்வந்திருக்கின்றார்கள் கனடா படைப்பாளிகள் உலகம் உட்பட. பார்ப்போம் காலம் நிச்சயிக்கட்டும்.
ஆர் எஸ் கலா
தற்போது நூல் வெளியீடு செய்யும்நோக்கம் இருப்பின் அதை யார் மூலம்செய்து முடிக்க ஆசைப்படுகின்றீர்கள்?
ராஜ் சுகா
குறிப்பிட்டு சொல்லமுடியாது, ஆசை என்றெல்லாம் இல்லை. 


ஆர் எஸ் கலா
முகநூல் கவிதை எழுதிக் கொண்டுஇருந்த சிலர் வேறு வழிகளில் முகம்காட்டி பேரும் புகழும் வந்த பின் முன்பு இருந்த அந்த நெருக்கமான நட்பு தற்போது இல்லை என்று பலர் வேதனையோடுகூறுகின்றார்கள் இவர்கள் பற்றி உங்கள்பதில் எவை ? ராஜ் சுகா
முகநூல் என்று மட்டுமில்லை பொதுவாகவே மனிதரிடம் இப்பண்பு பரந்துதான் காணப்படுகின்றது, சந்தர்ப்பவாதிகளாக சுயநலவாதிகளாக நம்மத்தியில் அநேகருண்டு. அதற்கேற்றாற்போல நாம் நம்மை சுதாகரித்துக்கொள்ள வேண்டும். அதேவேளை முகநூல் மூலம் சிறந்த உறவுகள் நட்புக்கள் இல்லாமலும் இல்லை.
ஆர் எஸ் கலா
ஒரு கட்டத்தில் எதிரியாக பார்த்தும்பேசியும் வருவோர் சம்மந்தப்பட்ட நபரால்தனக்கு ஏதேனும் லாபம் என அறிந்து ஒன்றும் அறியா பிள்ளை போல் நெருங்கிஉறவாட ஆசைப்படுவோரையும் பதவிக்கும் பணத்துக்கும்குணத்தை மாற்றுவோரையும் நீங்கள் எந்தநிலையில் வைத்து பார்ப்பீர்கள்? ராஜ் சுகா
அவர்கள் பச்சோந்திகள் பக்கத்தில் வைத்துக்கொள்வதே பாவம்.

ஆர் எஸ் கலா
அரசியல் வாதியர் போல் கவிஞர்களும்வாக்கு மாறுவது நியாயமா? பல விசயங்களைதாமே முன் வந்து செய்து முடிப்பதாக கூறி விட்டு கண்டும் காணாது போல் நடாத்தும்அமைப்புக்கள் பற்றி உங்கள் பதில்?
ராஜ் சுகா
அவர்களும் சந்தர்ப்பவாதிகளே.
ஆர் எஸ் கலா
தமிழ் வளர்க்க என்று உரையாற்றும்பலர் இன்னொருவன் அறிவை வித்துபேரும் புகழும் பணமும் சம்பாதிக்கின்றான்என்றால் அவர்களை என்னவென்று வர்ணிப்பீர்கள்? இப்படிப்பட்டோருக்குஉங்கள் சாட்டையான பதில் எவை? ராஜ் சுகா
வெட்கம் இல்லாதவர்கள். எப்படியும் வாழலாம் என திரியும் இவர்கள் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை
ஆர் எஸ் கலா


இறுதியான கேள்வி ஆதங்கத்தின்அரங்கம் தலைப்பு பற்றியும் அதில்இரண்டாவது அறிமுகம் தாங்கள் இவை பற்றியும் புதிய எழுத்தாளர்களுக்குநீங்கள் கூற விரும்புவதையும் கூறுங்கள் ? ராஜ் சுகா
சிறந்த தலைப்பு, வித்தியாசமான சிக்கலில் மாட்டிவிடும் கேள்விகள் (ஹா ஹா சும்மா) மனந்திறக்கவைத்திடும் சமயோசிதம் கொண்ட கலா அக்கா, எல்லாமே சிறப்பு. உங்கள் சேவை சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்னையும் உங்கள் பகுதியில் இணைத்துக்கொண்டு வாய்ப்பளித்த தடாகம் குழுவினருக்கும் கலா அக்கா உங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
புதிய எழுத்தாளர்களுக்கு சொல்லுவதற்கு என்னிடம் பெரும் அனுபவங்கள் இல்லை நானும் அதே வட்டத்துக்குள் இருப்பதனால், ஆனாலும் எம்மை சிறந்த படைப்பாளிகளாய் வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் போலியான புகழ்ச்சிக்குள் சிக்குண்டுவிடாமல் தரமான ஆலோசனை, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு உங்களுக்கென்று காத்திரமான பாதையினை வகுத்துக்கொள்ளுங்கள். ஒரே பாடலில் வளர்ந்துவிடும் சினிமா கதாநாயகர்களை போலல்லாது படிப்படியாக முன்னேறுங்கள் அதுதான் நிலைத்து நிற்கும் காலத்தால் பேசப்படும். வாசிப்பை விட்டுவிடாமல் சக படைப்பாளிகளோடு கைகோர்த்துக்கொள்ளுங்கள் சிறந்த எதிர்காலம் அமையும்.
ஆர் எஸ் கலா
மகிழ்ச்சி சகோதரி சுகா மிக அருமையாகநிதானமாகவும் பதில் உரைத்துள்ளீர்கள் ன் நன்றிகள் பல தங்களுக்கு உங்கள்நேரத்தை ஒதிக்கி எங்கள் ஆதங்கத்தின்அரங்கம் நேர்காணல் வழியே வருகை தந்தமைக்கு எனது சார்வாகவும் ஆசிரியர் சார்வாகவும் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்தாங்களும் மிக விரைவில் நூல் வெளியீடு செய்த கவிஞர்கள் வரிசையில் விரைவாகஇடம் பிடிங்கள் சகோதரி அது ஓர் அடையாளமும் கூட வாழ்த்துக்கள்
ஆர் எஸ் கலா

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.