புதியவை

ஆதங்கத்தின் அரங்கம் ஆதவப் பிரியன் நேர்காணல் ஆர்.எஸ்.கலா

இவ்வாரம் ஆதங்கத்தின் அரங்கம் ஆதவப் பிரியன் நேர்காணல் ஆர்.எஸ்.கலா

சின்னதாய் துடுப்பெடுத்து சிரிப்போடு தோணியிட்டேன் நாத்திகவாசியின் பெரும் தலைவனின் உள்ளக்கடலிலே. வெள்ளை மனம் பீள்ளை சிரிப்பு அரசியல் விவாதத்துக்கு அதிரடி மன்னன். மதங்களை தாக்குவதில் எரிமலைக் கண்ணன். ஆனாலும் அருமையான எழுத்தாளன் தமிழை நேசிக்கும் உண்மைத் தமிழன். நல்ல படைப்பாளிகளை இனம் கண்டால் பலரிடம் கொண்டு இணைத்துப் பாராட்டி ஊக்கம் கொடுக்கும் நல்ல மனிதன். என் கவிப்பாதைக்கும் ஒரு துணைக்கரமாக அன்றும் இன்றும் துணை புரியும் அருமை நண்பன். தனக்கென ஒரு பாதை அமைத்து பயணம் செய்யும் கவிஞன். ஆம் நண்பர்களே கலகலப்பானவன் பலருக்கு பிரியமான ஆதவப்பிரியனை இவ்வாரம் ஆதங்கத்தின் அரங்கம் வழியே கொண்டு நிறுத்துகின்றது தடாகம் மின் இதழ் தவறாது படித்துக் கருத்திடுங்கள் நட்பூக்களே நன்றி

தடாகம் மின் இதழ் தவறாது படித்துக் கருத்திடுங்கள்


ஆர் எஸ் கலா : 
வணக்கம் கவிஞர் ஆதவப் பிரியன் அவர்களே தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர் பற்றியும் தற்போது வசிக்கும் நாடு பற்றியும் தங்களின் குடும்பத்தார் பற்றியும் தங்களின் படிப்பு பணி இவைகளைப் பற்றி கூறி உங்களை ஆதங்கத்தின் அரங்கம் நேயர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்
ஆதவப் பிரியன் : தமிழகத்திலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் கீழச்சிவல்பட்டி என்பது தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எனக்கு ஓர் அண்ணன் மூன்று தங்கைகள். பள்ளிப்படிப்பு உள்ளூரிலும் மின்னியல் டிப்ளமோ காரைக்குடியிலும் முடித்துவிட்டு சிங்கப்பூரில் மின்சார பராமரிப்பு வேலையில் இருக்கிறேன்.
ஆர் எஸ் கலா :
ஒரு எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் எவை? அவன் எழுத்தை வளர்க்க தேவையானவை எவை?
ஆதவப்பிரியன்: கற்பனை வளமும் வார்த்தை வளமும். தொடர்ந்து வாசிக்கவேண்டும். சமகால அரசியல் சமூக நிகழ்வுகளை உள்வாங்க வேண்டும்.
ஆர் எஸ் கலா :உங்கள் இல் வாழ்கை துணைவியார் பிற மொழி நீங்க வசிக்கும் இடம் ஆங்கில மொழிக்கு முதல் இடம் கொடுக்கும் நாடு இந்த சூழ் நிலையில் நீங்க எப்படி தமிழ் மேல் இந்த அளவு பற்று உள்ளவராக உள்ளீர்கள்? அது பற்றி கூறுகள் ?
ஆதவப் பிரியன்: மனைவி பிலிப்பைன்ஸ் நாட்டவர், மூன்று பையன்கள், வேலை நிமித்தம்ஆங்கிலம் அதிகம் பேசவேண்டி வரும், தமிழுடனான தொடர்பு விட்டுப்போய்விட கூடாதென்றுதான் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தமிழில் படிக்க எழுத முயற்சி செய்து வருகிறேன்.
ஆர் எஸ் கலா :நீங்கள் நன்றாக எழுதும் ஒரு எழுத்தாளர் பல பத்திரிக்கையிலும் உங்கள் கவிதை வெளியாகி உள்ளது பாராட்டும் பரிசும் பெற்றுள்ளீகள் இருந்தும் ஒரு எழுத்தாளனுக்கான அடையாளம் முகநூல் இல்லை இவை ஏன்? ஏதாவது ஒரு இலட்சியத்தோடு தாமதிக்கின்றீர்களா?
ஆதவப்பிரியன்: நான் அதிகம் படிக்க மட்டுமே விரும்புபவன். உள்வாங்கியவற்றை சில சமயங்களில் எழுதுவதுமுண்டு. மற்றபடி நான் முழுநேர கவிஞனோ எழுத்தாளனோ அல்ல
ஆர் எஸ் கலா :முகநூல் தான் உலகம் என்று எழுதிக் கொண்டு இருக்கும் நவரிடம் நீங்க. வேறு ஓர் தழத்தை சுட்டிக் காட்டி எழுதும் படி கூறுவதாக இருந்தால் எதை குறிப்பிடுவீர்கள்? பத்திரிக்கை, பலைப்பூ. வானொலி. தொலைக்காட்சி. அதை எதற்காக நீங்கள் முன் உதாரணப் படுத்துவது காரணம் எவை?
ஆதவப்பிரியன்: சுதந்திரமாக எண்ணங்களை பதிவு செய்ய வலைப்பூ சரியான தளம். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் சிந்தனை பலரையும் சென்றடைய வேண்டுமென்ற தாகமிருந்தால் மற்ற ஊடகங்களிலும் முயற்சி செய்யலாம், ஆனால் சில சமரசங்கள் செய்து கொள்ளவும் வேண்டி வரும்.
ஆர் எஸ் கலா :
நீங்கள் இந்தியா நாட்டை சேர்ந்தவர் என்பதால் இக் கேள்வி சாதி வெறிக் கொலை தொடர் கதையாகப் போகின்றதே இதை மாற்ற என்ன வழி உண்டு என்று நீங்கள் நினைக்கின்றீகள்? இவை அறியாமை யா?
இல்லை அரசியலின் விளையாடலா?
ஆதவப்பிரியன்: அரசாங்கம் சாதி மதம் மாறி திருமணம் புரிபவர்களுக்குகல்வி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்தால் படிப்படியாக இந்நிலை மாறிவிடும்.
ஆர் எஸ் கலா :
தமிழை மதிக்கும் தமிழ் நாட்டில் தமிழும் தமிழ் பண்பாடும் மனிதநேயமும் அழிந்து கொண்டே வருகின்றது என்றால் ஒத்துக்கொள்வீர்களா? இவை எதனால் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
ஆதவப்பிரியன்:உலகம் முழுவதுமே தற்போது முதலாளித்துவத்தின் பிடியில் தான். முதலாளித்துவம் ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அவர்களின் பொருளாதார வலிமைக்கே அதிக முக்கியத்துவத்தை அளிக்கும். தமிழ்ச்சமூகம் பொருளாதார ரீதியில் வலுவாகவே உள்ளது, எனவே அவர்களின் தமிழ் உணர்வுகளைஅழிக்கும் முயற்சியில் முதலாளித்துவம் ஈடுபட வாய்ப்பில்லை என நம்புகிறேன்.
ஆர் எஸ் கலா :
இலக்கியம் படித்தால் தான் அவன் கவிஞன் என்று ஒரு சிலர் வாதாடுகின்றார்களே இவைக்கு உங்கள் பதில் எவை? ஒரு கவிஞனுக்குள் இருக்க வேண்டிய முக்கியமானவை எவை எவை?
ஆதவப்பிரியன்: இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் உணர்வுகளை கவிதைகளில் வெளிப்படுத்தலாம் என்பது மரபுக்கவிதை மீது மயக்கம் கொண்டவர்களின் கூற்று.தற்போதைய தமிழின் வளர்ச்சிக்கு மேல்த்தட்டு வர்க்கம் மட்டும் போதாது என்பதை புரிந்துகொள்ளாதவர்கள் அவர்கள். தற்கால கவிஞனுக்கு மழலையின் கையை கூட பிடித்துக்கொண்டு நடனமாடும் புதுக்கவிதையின் புதுமையை கொண்டாடும் மனநிலை வேண்டும்!

ஆர் எஸ் கலா :
உண்மையிலே இந்தியா வல்லரசு நாடாக ஆகவேண்டும் என்றால் என்ன? மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் எவை ஏற்றம் காண வேண்டும்?
ஆதவப்பிரியன்: ஒரு நாட்டில் மக்களின் பொருளாதாரவலு அதிகமாக அதிகமாக அவர்களின் தனிமனித உரிமை மீதான விழிப்புணர்வு தன்னால் அதிகரிக்கும். ஏழை நாடுகளில்தான் தனி மனித உரிமை மீதான மத கலாச்சார பண்பாட்டு அத்துமீறல்கள்அதிகமிருக்கும். அதற்காகவாவது இந்தியர்கள் பொருளாதாரரீதியாக வலுவடையட்டும்.
ஆர் எஸ் கலா :
பல திறமையான எழுத்தாளர்கள் இன்னும் தங்கள் முகம் காட்ட தயங்குகின்றார்களே அவர்களுக்கு உங்கள் அறிவுரை எவை?
ஆதவப்பிரியன்: தங்கள் முகத்தையே காட்ட தைரியமில்லாதவர்கள் அப்படியென்னதான் சமூகத்திற்கு தைரிய மூட்டப்போகிறார்களோ!

ஆர் எஸ் கலா :
இன்னும் பெண் அடிமைத்தனம் வளர்ந்து கொண்டே போகின்றதே எதனால்? இன்னும் சில பெண்கள் பழய பழமொழியை பேசிவிட்டு அடிமை என்ற விலங்கை ஒடைத்து வெளி வர துணியாமையா? ஆண் ஆதிக்கம் நிலையானதாலா?
ஆதவப்பிரியன்: அணையப்போகும் விளக்கு போன்றது தான் தற்போதைய ஆணாதிக்கத்தின் நிலை, தொடரும் கல்வியறிவும் பொருளாதார தன்னிறைவுக்கான வாய்ப்புகளும் மத கலாச்சார அழுத்தங்களையும் தாண்டி பெண்களை தங்கள் உரிமைகளைமீட்டெடுக்க வைக்கும்!
ஆர் எஸ் கலா :முகநூல் வழியே பிறரை போற்றுவதை விட தூற்றுவோர் தான் அதிகம் உண்டு முகநூல் என்பது உண்மையிலே தவறான தழமா? இல்லை மாற்றி அமைக்கலாமா?

ஆதவப்பிரியன்:முன்னர் டீக்கடையில் அரட்டையடித்தோம்,இப்போது முகநூலில் அரட்டையடிக்கிறோம்,எல்லாம் கலந்து தான் வரும்

ஆர் எஸ் கலா :மதத்தைக் காட்டி சிலருடைய ஆசைக்கும் முயற்சிக்கும் சில நாடு பெண்ணுக்கு தடை போடுகின்றதே?
ஆதவப்பிரியன்:மதம் என்ற அமைப்பே பெண்களுக்கு எதிரானது தான், அதை பெண்களே உணர முடியாமல் இருப்பது தான் அவர்களின் மிகப்பெரிய அறியாமை
ஆர் எஸ் கலா :
உதாரணம் நான் ஒரு வீடியோ பார்த்தேன் முகநூல் திறக்க அந்த நாட்டில் பெண்ணுக்கு தடை ஆனால் அவள் மறைமுகமாக திறந்து விட்டாள் அறிந்ததும் ஊர் ஒன்று கூடி அடித்துக் கொன்றார்கள் என் நெஞ்சை வருத்திய காட்சி ஏன் இப்படி என்று நினைக்கின்றர்கீள்.
இலங்கையில் அருமையான பாடல் ஆசிரியர்கள் உண்டு அவர்களுக்கு சினிமா உலகம் இடம் கொடுத்தும் எழுதமுடியாத நிலமை காரணம் முஸ்லிம் பெண் என்பதுதான் ஆனால் ஆணுக்கு அனுமதி உண்டு இதற்கு உங்கள் பதில் எவை?
ஆதவப்பிரியன்: அத்தகைய மதத்தின் அடிப்படையில் சட்டங்களை இயற்றும் நாடுகள்மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதி என்பது என் கருத்து,தனி மனித உரிமையை மதிக்காத எந்த மதமும் காட்டுமிராண்டிகளின் மதமே
ஆர் எஸ் கலா :நீங்கள் நூல் தொகுப்பு எப்போது வெளியீடு செய்வது?

ஆதவப்பிரியன்: அது அவசியமென எனக்கு இதுவரை தோன்றவில்லை, தோன்றினால் உடனே செயல்படுத்துவேன்

ஆர் எஸ் கலா : தடாகம் இலக்கியம் வட்டத்தில் இணைந்துள்ளீர்களா?

ஆதவப்பிரியன் : இல்லை போட்டிக்கவிதைகளில் ஆர்வம் குறைவு நேரமும் பற்றாக் குறை அதனால் போட்டிக்கான குரூப் புக்களில் இணைவது இல்லை

ஆர் எஸ் கலா :நீங்கள் விரும்பி படிக்கும் இலக்கிய நூல் படித்ததில் பிடித்த கவிஞர் ?
ஆதவப்பிரியன்:இதை மட்டுந்தான் படிப்பேன் என்று வரையறை எதுவும் கிடையாது, கவிதையும் படிப்பேன் அவ்வளவுதான், முகநூலில்புதிதாக எழுத வந்துள்ள அனைத்து கவிஞர்களையும் பிடிக்கும்
ஆர் எஸ் கலா :மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் உலகில் எவைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்று உங்கள் மனதில் சிறு ஆதங்கம் எழுமே அதை ஆதங்கம் வழி கூறுகள் ?
ஆதவப்பிரியன்:இயற்கையை ரசியுங்கள், பேணுங்கள் அது போதும், மட மதங்களை அதன் முரண்களை கேள்வி கேளுங்கள், கேள்விகளுக்கு அப்பாற்பட்டதென்று விலக்கு அளிக்கப்பட்டதால் தான் மதங்களுக்கும் மதம் பிடித்தது.
ஆர் எஸ் கலா :ஊடகங்கள் அனைத்தும் பிரபலமான ஒருத்தரையே மாறி மாறி உலகுக்கு அடையாளம் காட்டு கின்றதே திறமையான பலரைக் கண்டுக்குவதே இல்லையே அது பற்றி உங்கள் கருத்து?
ஆதவப்பிரியன்:புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள சிரமங்களைஎண்ணுவதின் பின்னாலிருக்கும் சோம்பேறித்தனம் பற்றி அவர்கள்உணர்வதில்லை. பிரபலங்களுக்கு ஒளிவட்டம் கொடுப்பதும் அவர்கள்தான் அதன் பிரகாசத்தில் புதியவர்களை மறப்பதும் மறைப்பதும் அவர்கள்தான்.
ஆர் எஸ் கலா :ஒரு பேச்சுக்கு நீங்கள் ஆட்சியில் அமர்ந்தால் எந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கொடுப்பீர்கள்?
ஆதவப்பிரியன் :மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்
ஆர் எஸ் கலா :ஒரு கவிஞனுக்கு பரிசு பாராட்டு கிடைத்து புகழின் உச்சம் என்று எடுப்பதா? அவனின் ஊக்கத்துக்கு ஒரு தூண்டு கோல் என கருதுவதா?
ஆதவப்பிரியன்: படைப்பாளனை விட படைப்புகள் முன்னிறுத்தப்படவேண்டும், ஆனாலும் சிறந்த படைப்புகள் பலரை சென்றடைய பரிசு பாராட்டு போன்றவை முக்கியமானவை என்றே நினைக்கிறேன்


மகிழ்ச்சி கவிஞர் ஆதவப்பிரியன் அவர்களே தங்களின் பணிச் சுமை பற்றி நங்கு அறிவேன் இருந்தும் எங்களோடு ஒத்துழைத்து என் கேள்விகளுக்கு அமைதியாகவும் அருமையாகவும் பதில் உரைத்து ஆதங்கத்தின் வழியே உங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டமைக்கு என் சார்வாகவும் ஆசிரியர் சார்வாகவும் நன்றியுடன் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் விடை பெறுகின்றேன். நீங்களும் நூல் வெளியீடு செய்து ஒரு அடையாளம். பெறுங்கள்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.