புதியவை

பனாமா அறிக்கைகள் கவிஞர் எஸ். நஜிமுதீன்


பனாமா அறிக்கைகள் கவிஞர் எஸ். நஜிமுதீன் (சும்மா ஒரு குஜாலுல)
சாகா வரம் பெற்ற பாண்டி- அவன் சாதி சனங்களை நோண்டி, வாகாய்ப் பல பொருள் வேண்டி -இப்போ வகையாக மாட்டிக் கொண்டானாண்டி,
கோடி பலப் பல தேடி - தன் கோடிக்குள் குழி பல தோண்டி குவித்தவை, களித்தவை போக - மீதி கொண்டு போய் கொட்டினானாண்டி.
ஜாடிக்குள் போய் விட்டதாண்டி - இப்போ ஜனங்களின் முன்னாலே ஆனது நோண்டி ஜாலக் கண்ணாடியும் தாண்டி - அது சல சலத்தோடுது சறுக்கினால் ஆண்டி.
நாட்டுத் தலைவர்களாண்டி - சிலர் நல்ல பதவியில் நடிப்பவர்தாண்டி கோட்டுடன் திரிபவராண்டி - இனி ரோட்டுடன் ரோமியோ ஆகினாராண்டி
மின் வலையினில் மாட்டினராண்டி-மீன்களாய் மெத்தவும் நீந்திடல் முடியுமோ ஏண்டி, எந்நிலையிலும் அறிந்திடா தூண்டி - எங்கோ இரையோடு எதிர்பார்த்து இருந்த தாமாண்டி
ஒரு தலை போச்சுது ஐஸ்லாண்டி(ல்)- எப்போ மறு தலை போவதோ அறியேனே நான்டி தறு தலையெல்லாம் இவராண்டி - இப்போ இரு தலைக் கொள்ளி எறும்பானராண்டி..
குத்து விளக்கெல்லாம் தூண்டி- இருள் குவிந்த இடமெல்லாம் தேடி, குந்த வைத்தால் இந்தக் கேடி - பண்ணும் குற்றம் தொலையாதோ ஏண்டி .
மன்னர் பரம்பரை என்றும் - இவரை மண்ணாளும் மனிதர்கள் என்றும், மகுடம் கொடுத்தவர் நாம்டி- மணிமுடி மகிமையைக் காத்திடார் மறுபடி ஏண்டி?

கவிஞர் எஸ். நஜிமுதீன்No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.