புதியவை

அப்பாவின் சாரம் - சிவமேனகை


அப்பா எப்ப அப்பா வருவாய்,,,,முன்னம் எல்லாம் எனக்கு தனியவே சொந்தமாய் இருந்த நீங்க கடைசியாய் கட்டி மறந்து போய் விட்டு விட்டு போன சாரத்துக்கு இப்ப தம்பியும் உரிமை சண்டை பிடிச்சு அம்மா தம்பிக்கு பாதியை வெட்டி குடுத்துட்டா ,,,அவனும் அதுதான் வேண்டும் என்று நான் குடுத்த கார், பொம்மை,விளையாட்டு சாமான் எல்லாத்தையும் தூர எறிஞ்சு அடம் பிடித்து உங்கட சாரத்தை வாங்கி வைச்சு படுக்கிறான் அப்பா ,,,அப்பாவின் சொத்து ஆம்பிளை பிள்ளையளுக்கு தான் சொந்தம் என்று அம்மா அதுக்கு வேற நியாயம் சொல்லுறா ,,எனக்கு அதெல்லாம் விளங்கிற வயது இன்னும் வரவில்லை என்றாலும் அப்பா உங்கட சாரம் அதோட கூட உங்கட நினைவுகளும் இல்லாமல் நித்திரையே வராது அப்பா ,,,அது அம்மாக்கும் தம்பிக்கும் விளங்குது இல்லையப்பா,,,நான் இப்பவெல்லாம் நீங்க 2,3 சாரத்தையாவது கட்டி போட்டு விட்டு போய் இருக்கலாம் என்று நினைக்க தொடங்கிவிட்டன் அப்பா,,,அம்மாட்ட நேரடியாக கேட்டு போட்டன் அம்மா அன்றைக்கு ஒருநாள் கோபத்தில சொல்லுறா இதையே நீங்க மறந்து போய்தான் விட்டு விட்டு போனநீங்களாம் என்று சொல்லுறா அப்பா,,,
காணி எல்லைகள் சொத்துக்கள் எல்லாம் பிரிக்க கடுமையா சண்டை போட்டு நின்ற நீங்கள் பிள்ளைகளை நீயே வைச்சுக்க என்று சொன்னதாக அம்மா அன்றைக்கு மாமாவோட சொல்லி அழுகிறா அப்பா,,,எப்படி அப்பா ,,,, அப்பா அப்பிடி கடைசி மட்டும் நீங்க சொல்லி இருக்க மாட்டீங்க என்று அந்த 4 வயது மட்டும் உங்களோட இருந்த அந்த நாள் சந்தோசமான நினைவுகள் எனக்கு திரும்ப திரும்ப சொல்லுதப்பா ,,அதோட அம்மா அப்படி சொல்லும் பொழுது உங்கட இரத்தமும் எனக்குள்ள கொதிக்குதப்பா ,,,அம்மா அப்பாவை பற்றி பொய் சொல்லாத என்று நான் மாமாவுக்கு முன்னாலேயே இந்த சின்ன வயதில உங்களுக்காக கதைத்து அடி வாங்கும் அளவுக்கு எனக்கு உங்கள்ள அதிகம் பாசம் இருக்குதப்பா ,,,,அது உங்களுக்கும் இருக்கும் என்று எனக்கு தெரியும் அப்பா ,,, முழங்காலில இந்த சரத்தில ஏணை கட்டி நீங்கள் வீட்டுக்கு உள்ளேயே ஊஞ்சல் ஆட்டிய அந்த நாட்களை உங்கள் நெஞ்சில் தவழ்ந்த நாட்களை தோளில் சுற்றுலா வந்த நாட்களை எப்படி அப்பா என்னால மறக்க முடியும்.,,,தம்பி சாறத்தை பாதியை பறிச்சது எனக்கு ஆரம்பத்தில் கோபமாய் தான் இருந்தது.அவன் நித்திரை ஆனதும் அவன்ர பாதியையும் நான் எடுத்து வைத்து படுத்த நாட்களும் இருக்குது அப்பா ,,,ஆனா இப்பவெல்லாம் எனக்கு என்னை விட தம்பி தான் அதிகம் பாவம் மாதிரி தெரியுதப்பா நானாவது உங்களை தழுவி தடவி உங்கள் உடம்பில் ஊர்ந்து விளையாடி இருக்கிறேன் அவனுக்கு அந்த அளவுக்கு கூட சந்தர்பம் கிடைக்கவில்லை.அவன் ரோட்டில மற்ற அப்பாமார் அவேர பிள்ளைய தோளில ,சைக்கிள்ள கொண்டு போகும் பொழுது நம்மட அப்பா எப்ப வருவார் என்று அடிக்கடி கேட்கிறான் அப்பா ,,,,அம்மா சிலவேளை கோபத்தில அவர் வரவே மாட்டார் என்று சொல்லி அவவும் அழுகின்றா அப்பொழுது நாங்கள் இருவரும் அழுவது ஊருக்கு கூட தெரியும் அப்பா ,,,,ஆனா எனக்கு நீங்கள் எப்பிடியும் பிள்ளையிட்ட வருவீங்க என்ற நம்பிகை இருக்கு அப்பா ,,,அது இப்ப கொஞ்சநாளா எனக்கு வடிவா தெரியுதப்பா ,,,ஏன் என்றால் இப்பவெல்லாம் அந்த தம்பியின் பாதி சாறதுண்டை அவன் நித்திரை கொண்டதும் அம்மா தான் எடுத்து முகத்திலை வைச்சு வைச்சு கொஞ்சுறா அப்பா ,,,,,,அப்பா நீங்க முகபுத்தகதில கதை கவிதை எல்லாம் எழுதுறீங்க என்று அம்மா நேற்றும் வாசித்தும் காட்டினவா ,,,தம்பிட்ட நாம அப்பாட்ட போவமா என்றும் கேட்டவா ,,அவன் உடன போவம் என்று சொன்னவன் நானும் தான். வேணி மாமியோடையும் அம்மா உங்களிட்ட வாறது பற்றி கதைத்தவா ,,,,,அதால இந்த முறை அம்மா உங்களோட சண்டை பிடிக்கமாட்டா நீங்களே நம்ம வீட்ட கெரியா வாங்கப்பா ,,,,,,கெரியா வாங்கப்பா ,,,,,நான் வளர்ந்துட்டன் ,,,,,தம்பிக்கு வீட்டுக்க சாரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டோனும் வாங்கப்பா ,,,,,,,,நன்றி வணக்கம் ,,,சிவமேனகை ,,,,,,

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.