புதியவை

அரசாங்க நிருபவனம்கள் நஷ்டம் அடைவது , மக்கள் மீது சுமையாகிறது NDPHR
நாடு செழிப்படைய வேண்டு மென்றால், மக்கள் வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டுமென்றால் அரச இஸ்தாபனங்கள் நஷ்டமடைவதை தவிர்க்க அதில் முக்கிய கவனஞ் செலுத்த வேண்டும். வருடா வருடம்  பல கோடிகளை இழக்கும் அரச இஸ்தாபனங்கள் அறிவும் அனுபவும் கொண்டோரால் நிர்வகிக்கப்பட வேண்டும். துறைசார் அனுபமும் அறிவும் அற்ற அரசியல்வாதிகளை அதாவது தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் ,உறவினர்கள் போன்றவர்களை  அங்கொன்றும் இங்கு ஒன்றுமாகத் தூவி விடுவதை நிறுத்த வேண்டும். தனியார்த் துறைக் கம்பனிகள் இலாபத்தைக் கொட்டி அதில் அரசாங்கத்துக்கு வரியை அள்ளியிறைக்கிறது. அதே நேரம், அரசாங்க இஸ்தாபனங்கள் நஷ்டமடைந்து அதை அடைக்க வரிப் பணத்தை பொது மக்களிடமிருந்து சுருட்டி எடுக்கிறது. இந் நிலைமை ஏற்படக் காரணமென்ன ? தனியார் துறைக் கம்பனிகள் அத்துறைசார் அறிவும் அனுபவமும் கொண்டோரால் நிர்வகிக்கப் படுகிறது. ஆனால், அரச இஸ்தாபனங்கள் அத் துறைசார் அறிவில்லாத, அனுபவமில்லாதவர்களை நிர்வகிக்கத் தேர்வு செய்கிறது. இறுதியில் இதன் தாக்கம் மக்கள் மீது வரிச்சுமை, இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் இஸ்தாபகர் மொஹிடீன் வாவா கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.