புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டு கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர்.அ.முத்துசாமி ,எம்.ஏ ; எம்.எட் ; எம்.பில் ; பேராசிரியர்

தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க
பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை
கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக்
கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து
காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில்
கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் ,
வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே இருப்பினும்
வேலைதேடி என்கைதான் விருப்பம் காணும்

.
நாட்டுக்குள் நடக்கின்ற அநியா யங்கள்
நாமறிந்த வேளையிலே எதிர்த்து எழுதி
தோட்டாபோல் பாவலன்கை துரிதமாய் ; பகையோ
தொகையாக வந்தாலும் பயமே இன்றி
நாட்டமுடன் நியாயமது பக்கம் நின்று
நாட்டுக்கு உழைத்திடுதல் நன்மை பயக்கும் ,
கூட்டமாய்க் கயவர்கள் கூடியே எதிர்த்தால்
குன்றாத வீரமுடன் சாய்க்கும் என்கை
 .
அழுவோரின் கண்ணீரைத் துடைத்திட என்றும்
ஆவலுடன் நீளவேண்டும் பாவலர் கைதான் , 
புழுபோல பசியாலே புலம்பித் தவிக்கும்
பொதுமக்கள் எவர்க்கும் பொருளை அளித்து
உழுகின்ற விவசாயி உள்ளம் ஏங்க
ஓடிவந்து உதவுவது பாவலர் கைதான் , 
வழுநீங்கி ஆட்சியிலே வளமை சேர்க்க
வழிகாட்ட வேண்டியதும் பாவலன் கையே !

கவிஞர்.அ.முத்துசாமி ,எம்.ஏ ; எம்.எட் ; எம்.பில் ;
பேராசிரியர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.