புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர்.ரதி மோகன் டென்மார்க்


ரதி மோகன் டென்மார்க்

தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டுக்குள்ளே கதையிருக்கும்
பல்சுவை நிறைந்திருக்கும்
கல்லையும் கனிய வைக்கும்
வானவில்லும் தரை இறக்கும்
மேகம் வந்து குடை பிடிக்கும்...
செடி கொடி எழுந்துவந்து
தோட்டம் துரவு கடந்து வந்து
பூக்களாய் யன்னலோரம்
மலர்ந்திருக்கும் சிரித்திருக்கும்
சிந்தை நிறை வரிகளை கைகள்
சிதறாமல் எழுதிச் செல்லும் ...
பெண்ணின் அழகையெல்லாம்
மண்ணின் பெருமையோடு
மெச்சி சொல்லும் வரிகளில்
காதலின் சுவையிருக்கும்
இன்ப ஊற்று பெருக்கெடுக்கும் ...
அநியாயம் அக்கிரமம்
அறிந்து வெகுண்டெழுதும்
வரிகளில் வீச்சிருக்கும்
தீ போன்ற பேச்சிருக்கும்
விழித்தெழ வழிகாட்டும்...
சிறைப்பட்ட உணர்வுகளை
சிறை உடைக்க வைத்திருக்கும்
கூரிய வார்த்தைகள் அந்த
வாளுக்கு ஒப்பாகும்...
உயிர்ப்பூவெடுத்து
உயரிய பாட்டெழுதும்
பாவலன் கையோடு
கை கோர்த்து நின்றால்
அடிமை விலங்கொடித்து
உன்னத உலகொன்று
படைத்திடுவோம்
இது உறுதி....
ரதி மோகன் டென்மார்க்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.